கரூர் துயரத்தின்போது உதவி செய்தவர்கள் யார், ஓடிப்போனவர்கள் யார்? என்று மக்களுக்கு தெரியும் ; கனிமொழி எம்.பி.
தூத்துக்குடியில் இன்று திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த ஆட்சியில் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள்,. எந்த இடத்திற்கு போகக்கூடாதோ அந்த இடத்திற்கே தொடர்ந்து சென்று, அங்கிருக்கக்கூடிய… மக்களுக்கு சிக்கல்களை உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக பள்ளிக்கூடங்களுக்கு சென்று .. அங்கே இருக்கக்கூடிய குழந்தைகளின் மனநிலையை பாதிக்கக்கூடிய அளவிற்கும், அவர்களுக்கு மன உளைச்சலை தரக்கூடிய அளவிற்கும் நடந்து… கொண்டிருக்கிறார்கள்.

இதையெல்லாம் தாண்டி முதல்-அமைச்சரும் அதை செய்யும் பொழுது, இந்த ஆட்சி எதை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது … என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுகிறது. முதல்-அமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் வரை அனைவரும் அவர்களுக்கென… பொறுப்புகள் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். நான் கரூர் துயரம் பற்றி அதிகமாக பேச விரும்பவில்லை…. ஏனென்றால், இது போன்ற துயர சம்பவம் குறித்து பேசுவதை பொறுப்புணர்வுடன் தவிர்ப்பதே நல்லது….
ஏனெனில் விசாரணையில் இருக்கக்கூடிய விஷயம் குறித்து பேச வேண்டாம் என்ற பொறுப்புணர்வு எனக்கு இருப்பதனால்… கரூர் துயர சம்பவம் பற்றி நான் பேசாமல் இருப்பதுதான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆனால், கரூர் துயரத்தின்போது.. மக்களோடு நின்றவர்கள் யார், அவர்களுக்கு உதவி செய்தவர்கள் யார், மக்களை தவிக்க விட்டுவிட்டு அங்கிருந்து . ஓடிப்போனவர்கள் யார் என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
இவ்வாறு கனிமொழி கூறினார்….







