கனிமொழி எம்.பி. வாகனம் தடுத்து நிறுத்தம்; 1 கி.மீ தூரம் நடந்து சென்று அழகுமுத்துக்கோன் சிலைக்கு மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் 316 வது பிறந்தநாள் இன்று ஜூலை 11 கொண்டாடப்பட்டு வருகிறது,.சென்னையில் உள்ள அழகுமுத்துக்கோன் சிலைக்கு அமைசர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள காட்டலங்குளத்தில் நடைபெற்ற மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழாவில்,பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேரில் மரியாதை செலுத்தினார்கள்.,
பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் குவிந்ததால் இப்பகுதியில் போக்குவரத்து நெருகடி ஏற்பட்டது, திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி காட்டலங்குளத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காகக் வருகை தந்தார்.
அப்போது பாதுகாப்பு காரணங்களைக் காட்டி அவரது வாகனத்தைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். வாகனத்தை உள்ளே அனுமதிக்கக் கோரி கனிமொழி எம்.பி. மற்றும் திமுக கழக நிர்வாகிகள் காவல்துறையினரிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், வாகனத்தை உள்ளே செல்ல காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. காவல்துறையினர் அனுமதி மறுத்ததால், கனிமொழி எம்.பி. தனது வாகனத்தில் இருந்து உடனடியாக இறங்கி, சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றார்.

காட்டலங்குளத்தில் உள்ள மாவீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சட்டமன்ற உறுப்பினர்கள் விளாத்திகுளம் ஜி.வி. மார்க்கண்டேயன், கோவில்பட்டி கருணாநிதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கயத்தாறு முன்னாள் யூனியன் சேர்மன் மாணிக்கராஜா, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்







