• April 27, 2024

Month: April 2023

செய்திகள்

சென்னை மெரினாவில் பேனா நினைவு சின்னம் அனுமதி மறுபரிசீலனை ; டி. ஜெயக்குமார்

வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட கழகத்தின்,திருவிக நகர் பகுதி கழகத்தின் சார்பில், சென்னை ஓட்டேரியில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர் தர்பூசணி ரோஸ் மில்க் கிர்னி பழம் மோர் உள்ளிட்ட பழங்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி. கடல் முகத்துவாரங்களில்தான் அதிகமான மீன் உற்பத்தி இருக்கும். அந்த முகத்துவாரத்தை ஒட்டியிருக்கின்ற 10 அல்லது 15 கிலோ மீட்டருக்கு மீன் வளம் பெருகும்.இந்த இடத்தில் […]

செய்திகள்

கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றத்தின் ஆய்வு சொற்பொழிவு நிகழ்ச்சி

கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றத்தின் ஆய்வு சொற்பொழிவு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.திருவள்ளுவர் மன்ற செயலாளர் நம் சீனிவாசன் வரவேற்றுப் பேசினார். புனித ஓம் கல்வி நிறுவன தாளாளர்இலக்குமணப் பெருமாள் தலைமை தாங்கினார். தொழில் வலாளர் இராசகுமார் முன்னிலை வகித்தார். தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற தலைப்பில் தமிழ் அறிஞர் மு.படிக்க ராமர் சிறப்புரை ஆற்றினார்.திருவள்ளுவர் மன்றத் தலைவர் பேராசிரியர் கருத்தப்பாண்டி நன்றி கூறினார். மன்ற நிகழ்ச்சியை துணைத்தலைவர் திருமலை முத்துச்சாமி தொகுத்து வழங்கினார். காமராஜர் பதின் பள்ளி […]

கோவில்பட்டி

பணி ஓய்வு பெற்ற ஆசிரியைக்கு பாராட்டு விழா

 கோவில்பட்டி நாடார் நடுநிலைப் ஆசிரியை ராஜேஸ்வரி 36 ஆண்டுகள் பணி செய்து ஓய்வு பெற்றதை ஒட்டிபணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு நாடார் உறவின்முறைச் சங்க செயலர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். பொருளாளர் சுரேஷ்குமார், பத்திரகாளியம்மன் திருக்கோயில் தர்மகர்த்தா மாரியப்பன், பள்ளிச் செயலர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை செல்வி வரவேற்புரை ஆற்றினார். பள்ளி ஆசிரியைகள் ஜெய ஜீவா, தனலட்சுமி, அருணா, ஜெப அகிலா,சங்கரா கிட்ஸ் வித்யாலயா முதல்வர் மீனா, பள்ளியின் பணி […]

செய்திகள்

மகனை ஆதரிப்பது சந்தர்ப்பவாத அரசியல்: ம.தி.மு.க.வை தி.மு.க.வுடன் இணைக்கலாம்; வைகோவுக்கு திருப்பூர் துரைசாமி

ம.தி.மு.க.வை திமுகவுடன் இணைத்து விடலாம் என்று வைகோவிற்கு அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதியுள்ளார். மதிமுகவை திமுகவுடன் இணைப்பதுதான் சமகால அரசியலுக்கு சாலசிறந்தது என்று திருப்பூர் துரைசாமி கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். மேலும், மகனை அரவணைப்பதும் சந்தர்ப்பவாத அரசியலும் எள்ளி நகையாட வைத்து விட்டது எனவும் வைகோவை கடுமையாக சாடும் வகையிலும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் மதிமுக தொடங்கப்பட்டபோது வைகோ வாரிசு […]

கோவில்பட்டி

தமிழக ஆண்கள் சப் ஜூனியர் ஆக்கி அணி பயிற்சி முகாம் – கோவில்பட்டி

சென்னையில் நடந்து முடிந்த தமிழக ஆண்கள் சப் ஜூனியர்  ஆக்கி  அணி தேர்வில் 25 வீரர்கள் பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டனர் அந்த 25 வீரர்களில் 15 வீரர்கள் கோவில்பட்டி வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு செய்யப்பட்ட கோவில்பட்டி வீரர்கள்  பெயர் விவரம் வருமாறு ராஜேஷ், கவுதம், சுகுமார், துரை மகேஷ், சுந்தர் அஜித், சிபி பாரதி, சுமந்த்  பாரதி, மகேஷ் பாரதி, தனுஷ் பாண்டியன், நவநீஷ்வரன், அரி செண்பக மூர்த்தி, நவீன் குமார்,  முவின் பாலாஜி, […]

செய்திகள்

தென் மாவட்ட ரெயில் போக்குவரத்து சேவையில்  மாற்றம்

தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- மதுரை ரெயில்வே கோட்டத்தின் கோவில்பட்டி- குமாரபுரம், விருதுநகா் – வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையங்களுக்கு இடையே சுரங்கப் பாதை அமைக்கப்படுகிறது. இதனால் இப்பாதை வழியாகச் செல்லும் அந்தியோதயா உள்ளிட்ட விரைவு ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவையிலிருந்து நாகா்கோவிலுக்கு காலை 8 மணிக்கு புறப்படும் விரைவு ரெயில் (வண்டி எண்: 16322) மே 3, 17 ஆகிய தேதிகளில் திண்டுக்கல்லுடன் நிறுத்தப்படும். இத்தேதிகளில் நாகா்கோவிலிலிருந்து […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் நெய்தல் கலைத்திருவிழா; கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்

தமிழர்களின் பண்பாடு, கலை, நாகரிகம் போன்றவற்றை பறைசாற்றும் வகையில் தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு சங்கரப்பேரி விலக்கு அருகில் உள்ள திடலில் 4 நாட்கள் நெய்தல் கலைத்திருவிழா நடத்தப்படுகிறது. இதன் தொடக்க விழா நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு கனிமொழி எம்.பி.தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.  மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், ஸ்பிக் நிறுவன முழுநேர இயக்குனர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேயர் ஜெகன்பெரியசாமி வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் கீதாஜீவன், […]

கோவில்பட்டி

கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தல திருவிழா கொடியேற்றம்

கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தல திருவிழா நேற்று (28.4.23) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.காமநாயக்கன் பட்டி திருத்தல பங்கு தந்தை அந்தோணி குருஸ் அடிகளார், உதவி பங்கு தந்தை ஜெரால்டு ரீகன் அடிகளார் பாளை மறை மாவட்ட செயலக முதல்வர் ஞானபிரகாசம் அடிகளார் கோவில்பட்டி திருத்தல பங்கு தந்தை அலோசியஸ் துரைராஜ் அடிகளார்,உதவி பங்கு தந்தை மகேஸ் அடிகளார் ,மற்றும் நாலாட்டின் புதூர் ,கீழஈரால் பங்கு அருட்தந்தையர்கள் இணைந்து புறாக்களை பறக்க விட்டு இறைமக்கள் ஜெபங்கள் செய்த வண்ணம் […]

கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்ட ஆண்கள் ஜுனியர் ஆக்கி அணி தேர்வு; கோவில்பட்டியில் 1-ந் தேதி

கோவில்பட்டியில் ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு மற்றும் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி சார்பாக கே ஆர் கல்வி நிறுவனங்கள் வளாகத்தில் மாவட்டங்களுக்கு இடையிலான ஆண்கள் ஜூனியர் ஆக்கி போட்டி மே 10 முதல் 13 வரை நடக்க உள்ளது அந்த போட்டியில் நமது தூத்துக்குடி மாவட்ட அணி கலந்து கொண்டு விளையாட இருப்பதால் மாவட்ட ஆக்கி அணி தேர்வு மே 1ஆம் தேதி காலை 6.30 மணிக்கு பாண்டவர்மங்கலம் ஆக்கி மைதானத்தில் வைத்து நடக்க உள்ளது […]

கோவில்பட்டி

தெற்கு திட்டங்குளம் தற்காலிக காய்கறி மார்க்கெட்டுக்கு அனுமதி கோரி போராட்டம்; 68 பேர்

கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தை இடிக்கப்பட்டு புதிப்பிக்கப்படுகிறது,. இதனால் அங்கு கடைகள் நடத்திய வியாபாரிகளுக்கு மாற்று இடமாக கூடுதல் பஸ் நிலையத்தில் இடம் ஒதுக்கி தரப்பட்டது. அங்கு சில கடைக்காரர்கள் மாறிசென்று கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள். ஆனால் நகராட்சி சந்தையில் இருந்த விவசாயிகள் பெரும்பாலோர் தெற்கு திட்டங்குளம் முத்து நகர் சந்திப்பில் வியாபாரிகள் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் தற்காலிகமாக தகர செட் அமைத்து காய்கறி மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரத்தை தொடங்கினார்கள். மக்களும் அதிக […]