கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றத்தின் ஆய்வு சொற்பொழிவு நிகழ்ச்சி
![கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றத்தின் ஆய்வு சொற்பொழிவு நிகழ்ச்சி](https://tn96news.com/wp-content/uploads/2023/04/IMG-20230430-WA0135-850x560.jpg)
கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றத்தின் ஆய்வு சொற்பொழிவு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
திருவள்ளுவர் மன்ற செயலாளர் நம் சீனிவாசன் வரவேற்றுப் பேசினார். புனித ஓம் கல்வி நிறுவன தாளாளர்
இலக்குமணப் பெருமாள் தலைமை தாங்கினார். தொழில் வலாளர் இராசகுமார் முன்னிலை வகித்தார். தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற தலைப்பில் தமிழ் அறிஞர் மு.படிக்க ராமர் சிறப்புரை ஆற்றினார்.
திருவள்ளுவர் மன்றத் தலைவர் பேராசிரியர் கருத்தப்பாண்டி நன்றி கூறினார்.
மன்ற நிகழ்ச்சியை துணைத்தலைவர் திருமலை முத்துச்சாமி தொகுத்து வழங்கினார். காமராஜர் பதின் பள்ளி முதல்வர் பிரபு, தமிழ் அறிஞர் ராசாமணி, கபில் மருந்தக உரிமையாளர் ராசாமணி, ஆசிரியர் பொன்ராசு, எழுத்தாளர் பொன்ராசு, உலக திருக்குறள் மையச் செயலாளர் ஜெயா ஜனார்த்தனன், கவிதாயினி விநாயக சுந்தரி, உரத்த சிந்தனை சிவானந்தம், வழக்கறிஞர் கண்ணன், கவிஞர் கவிமேகம், கண் மருத்துவர் மீனாட்சி சுந்தரம், ரொட்டேரியன் முத்துச்செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் சந்தன மாரியம்மாள், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் முனைவர் சம்பத்குமார் ஆகியோர் வழங்கி சிறப்பு செய்தனர்.
திருக்குறள் ஒப்புவித்த மாணவர்களுக்கு தொழில் வலாளர் ஆசியா பார்ம்ஸ் பாபு பரிசுப் பொருட்கள் வழங்கினார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)