கோவில்பட்டி கல்லூரியில் `சர்வதேச நிலவு தினம்’
கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் இயற்பியல் கழகம் சார்பாக இன்று 20-7-2026 காலை “சூரிய ஆற்றலை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லுதல்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை கல்லுாரி முதல்வர் (பொ) அ.பாண்டியராணி தலைமையுரையாற்றி துவக்கி வைத்தார். கோவில்பட்டி, சோலரிஸ் ரீஜென் டெக்னாலஜி பிரைவேட் லிட்., நிர்வாக இயக்குநர் சரவணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சூரிய ஆற்றல் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து உரையாற்றினார்.
மதியம் சர்வதேச நிலவு தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் வானியல் மன்றம் சார்பாக.முத்துமுருகன், தலைவர், ரோட்டரி கிளப், கோவில்பட்டி, முத்துசாமி உறுப்பினர், தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் மன்றம்,.கமலாராணி, இயற்பியல் ஆசிரியர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி, .ரமேஷ், செயலாளர், ரோட்டரி கிளப், ,.நடராஜன், உறுப்பினர், ரோட்டரி கிளப், ஆகியோர் சிறப்புரையாற்றியதுடன் வானியல் தொலைநோக்கியை பயன்படுத்தி கோள்கள் பற்றிய செயல்முறை விளக்கமும் அளித்தனர். வானியல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

.இவ்விரு நிகழ்ச்சிகளிலும் இயற்பியல் துறைத் தலைவர் பெ.சித்ரலேகா வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இயற்பியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் செய்திருந்தனர்.







