ஊத்துப்பட்டி பள்ளியில் `அறிவியல் பார்வையில் உடல்நலம் ‘ விழிப்புணர்வு நிகழ்ச்சி
Oplus_16908288
கோவில்பட்டி அருகே உள்ள ஊத்துப்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் அறிவியல் மன்றம் சார்பாக அறிவியல் பார்வையில் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தலைமையாசிரியர் மாயா தலைமை தாங்கி அறிவியல் மன்ற செயல்பாடு, நோக்கம், அறிவியல் பயன்பாடு பற்றி வாழ்த்தி பேசினார்.
முதுகலை ஆசிரியை உலகாண்டேஸ்வரி, பட்டதாரி ஆசிரியை ரேணுகா தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முதுகலை ஆசிரியர் சிலுவை அந்தோனி முத்து வரவேற்று பேசி னார்.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் வேளாண் அறிவியல் கல்வி ஆசிரியர் துளிர் இலை கீரை வளர்ப்பு செயல்பாட்டாளர் கோவில்பட்டி சுரேஷ்குமார் கலந்து கொண்டு அறிவியல் பார்வையில் உடல் நல கல்வியின் மேன்மைகள் பற்றி விரிவாக பேசினார்.
கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த 5 மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டும் நடந்தது.
அறிவியல் பட்டதாரி ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.
பள்ளியின் 6,7,8,9 -ம் வகுப்பு மாணவ-மாணவியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்







