தூத்துக்குடியில் வணிகர் சங்க பேரவை முப்பெரும் விழா; 2 அமைச்சர்கள் பங்கேற்பு
Oplus_16908288

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பாக வ.உ. சிதம்பரனார் 155-வது பிறந்தநாள், சிறப்பு மலர் வெளியீடு , மாநில பொதுக்குழு கூட்டம் என முப்பெரும் விழா தூத்துக்குடியில் நடைபெற்றது.
விழாவிற்கு மாநிலத் தலைவர் அ. முத்துக்குமார் தலைமை தாங்கினார். மாநிலப் பொதுச் செயலாளர் கே. ராஜா வரவேற்று பேசினார்.
தலைமை ஒருங்கிணைப்பாளர் மு. அருண்குமார் சிறப்பு மலரை வெளியிட்டு, முதல் பிரதியை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் பி. மதன்ராஜா பெற்றுக் கொண்டார்.
வ.உ. சிதம்பரனார் உருவப்படத்தை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஏ. ஸ்ரீநாத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் தேசிய செயலாளர் த. இந்திரஜித் ,வ.உ. சிதம்பரனார் குறித்து சிறப்புரையாற்றினார்.
விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
*சுதேசி வணிகத்தை ஊக்குவிக்க வேண்டும், வணிகர்களுக்கான *ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,
*கோவை மண்டலத்தை தொழில் மண்டலமாக அறிவிக்க வேண்டும், *கடைகளுக்கான மின் கட்டணம், தொழில் வரி போன்றவற்றை மறுபரிசீலனை செய்து குறைக்க வேண்டும்,
*வணிகர் நல வாரிய துணைத் தலைவராக வணிகர்களுக்காக தொடர்ந்து போராடி வரும் மாநிலத் தலைவர் அ. முத்துக்குமாரை நியமிக்க வேண்டும்
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்திய கலாச்சார நட்புறவு கழக மாநில செயலாளர் க. தமிழரசன், மாநிலத் துணைத்தலைவர் அபிராமி பி. முருகன், நிர்வாகிதுரைராஜ், வணிகர் சங்க பேரவை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் நாஞ்சில் குமார், சுமங்கலி ராஜா, பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.







