பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களு க்கு வ உ சி விருது
Oplus_16908288
கோவில்பட்டியில் அறிஞர் சங்கரவள்ளிநாயகம் அறக்கட்டளையின் சார்பாக வ.உ.சி பிறந்தநாள் , ஆசிரியர் தினம் , விருது வழங்குதல் என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.
பஜ்ரங் நர்த்தனயலாயா பள்ளி மாணவிகள் நடனத்தால் அனைவரையும் வரவேற்றனர். விழாவிற்கு அறக்கட்டளை நிறுவனர் மூத்ததமிழிஞர் திருமலை முத்துசாமி தலைமை தாங்கினார். மகாத்மா காந்தி அறக்கட்டளை தலைவர் திருப்பதிராஜா, செயலாளர் சுப்பராயலு,
கழுகுமலை திருவள்ளுவர் மன்றத்தின் தலைவர் பொன்ராஜ் பாண்டியன், செயலாளர் முருகன்,தல்லாசிரியர் ராஜாமணி, ஒய்வு பெற்ற வேளாண் துறை கண்காணிப்பாளர் நடராஜன் ,மதுரை உலக தமிழ் சங்க ஆய்வாளர் சோமசுந்தரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு பணிநிறைவு பெற்ற கனரா வங்கி மேலாளர் திருநாவுக்கரசன் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் மாணிக்கராஜ் (வேம்பார்), முருகசரஸ்வதி (கோவில்பட்டி),ஐடா ஸ்ரீ (தூத்துக்குடி), லதா (கோவில்பட்டி) ஆகியோர் கவிதை படைத்தனர்,
அதைத் தொடர்ந்து பள்ளி மாணவி மாதவி ஆசிரியர்களின் சிறப்புகளை எடுத்துரைத்தார். மதுரைப் பேச்சாளர் நூர்ஜகான் வ உ சி பற்றி சிறப்புரையாற்றினார். அதைத்தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு வ. உ. சி விருது வழங்கப்பட்டது. கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பேராசான் விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்வை ஆசிரியர் ஜெயபாரதி தொகுத்து வழங்கினார்.விழாவில் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்களும் ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.







