கோவில்பட்டியில் விடுமுறை ஆக்கி இறுதி போட்டி: நாடார் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி
Oplus_16908288

80 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி சார்பாக பள்ளி மாணவர்களுக்கு இடையிலான ஆக்கி போட்டி கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் கடந்த மூன்று மாதங்களாக போட்டிகள் நடந்து வந்தன.
இப் போட்டியில் தூத்துக்குடி சீனாவானா அரசு மேல்நிலைப்பள்ளி, கயத்தார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நாலாட்டின்புத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாடார் மேல்நிலைப்பள்ளி சிகப்பு நிறம், மற்றும் நீல நிற அணிகள், வேல்ஸ் வித்யாலயா பள்ளி, ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
லீக் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன. அதிக புள்ளிகள் பெற்ற 4 அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. அரை இறுதி போட்டிகள் நாக்அவுட் முறையில் நடத்தப்பட்டன.

இன்று காலை மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கான போட்டியில் கோவில்பட்டி செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 5-0 என்ற கோல் கணக்கில் கயத்தார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
காலை 7.30 மணி அளவில் நடந்த இறுதிப்போட்டியில் நாடார் மேல்நிலைப்பள்ளி சிகப்பு நிற அணியும் வேல்ஸ் வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளி அணியும் மோதின.
இதில் 2-1 என்ற கோல் கணக்கில் நாடார் மேல்நிலைப்பள்ளி சிகப்பு நிற அணி வெற்றி பெற்றது. தேவா சுகுமார் இருவரும் நாடார் மேல்நிலைப்பள்ளி அணிக்கு கோல் போட்டனர். வேல்ஸ் வித்யாலயா பள்ளி வீரர் ஜோகன் ஒரு கோல் போட்டார்.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு நாடார் மேல்நிலைப்பள்ளி செயலாளர் வழக்கறிஞர் ரத்தின ராஜா தலைமை தாங்கினார்.ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி, பொருளாளர் காளிமுத்து பாண்டியராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிலதிபர் வசந்தகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற முதல் மூன்று இடங்களுக்கு பரிசு கோப்பைகளை வழங்கினார்.
இப்போட்டியில் சிறந்த வீரராக நாடார் மேல்நிலைப்பள்ளி அணி வீரர் தேவா தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது முன்னதாக உடற்கல்வி ஆசிரியர் திருச்செல்வம் அனைவரையும் வரவேற்றார். பரிசளிப்பு விழாவில் உடற்கல்வி ஆசிரியர்கள் சுரேந்திரன் சுரேஷ்குமார் மாரியப்பன் முருகன் வேல்முருகன் மூத்த ஆக்கி வீரர் மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர் நடுவர்களாக காளிதாஸ், மதன்குமார், அஸ்வின், சண்முகப்பிரியா, மதனா ஆகியோர் செயல்பட்டனர்.







