கோவில்பட்டி, சண்முகசிகாமணி நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜேஷ் கண்ணா, தாலுகா அலுவலகத்திற்கு பணி நிமித்தமாக வந்தபோது, ஏடிஎம் அட்டை போன்று ஏராளமான அட்டைகள் குப்பையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் தாலுகா அலுவலகத்திற்கு சமூக ஆர்வலர் ராஜேஷ் கண்ணா இதுகுறித்து தகவல் தெரிவித்திருக்கிறார். அந்த அட்டைகளைப் பார்த்தபோது, அவை தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டைகள் என்பது தெரியவந்தது. அட்டைகளில் பயனாளிகள் அனைவரும் பாண்டவர்மங்கலம் உள்ளிட்ட கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்களாக இருந்தனர்.இதையடுத்து […]
தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம்; முதல்-அமைச்சரை மீண்டும் சந்தித்த பிறகு ஓ. பன்னீர்செல்வம்
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அடையாறு பூங்காவில் இன்று காலையில் நடைபயிற்சி செய்தபோது, அவரை முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார் பின்னர் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக முடிவெடுத்தார். இதனை அவரது முன்னிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், தி.மு.க.வை வீழ்த்துவது எங்கள் இலக்கல்ல என்று கூறியிருந்தார்.இந்த நிலையில் ஒரே நாளில் 2-வது முறையாக மாலையில் முதல்-அமைச்சர் ஸ்டாலினை ஓ. பன்னீர்செல்வம் சந்தித்துள்ளார். இது […]
கோவில்பட்டி அருகே ஊத்துப்பட்டி கிராமத்தில் தினமும் 20 பேருக்கு மட்டும் 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்குவதை கண்டித்தும், முறையாக தினமும் 100 பேருக்கு வேலை வழங்க வலியுறுத்தியும், வனத்துறை அலுவலத்தில் சுழற்சி முறையில் வேலை வழங்க வலியுறுத்தியும் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஊத்துப்பட்டி கிளைச்செயலாளர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்..ஆர்பாட்டத்தில் தாலுகா செயலாளர் பாபு, நகரச் செயலாளர் செந்தில் […]
நெல்லையில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் கொல்லப்பட்ட வழக்கில் ஏற்கெனவே கைதான சுர்ஜித்தின் தந்தை காவல் உதவி ஆய்வாளர் சரவணன் கைது செய்யப்பட்டார். நெல்லை மாநகர போலீசார் அவரைக் கைது செய்தனர். கவின் செல்வகணேஷ் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு நேற்று உத்தரவிட்டு இருந்தது. சுஜித்தின் தாயாரையும் கைது செய்ய வேண்டும் என்று கவின் குடும்பத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கவினின் தோழி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் “கவினின் கொலையில் […]
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் இன்று சென்னையில் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக கூட்டணியில் நீடிக்கவோ, விலகவோ நிர்வாகிகளிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டது. இதனால் நிர்வாகிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியதாவது;- 3 மணி நேரமாக நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றுள்ளது. ஆலோசனை கூட்டத்தில் 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.1. தேசிய […]
பருவநிலை மாற்றம் காரணமாக கடல்மட்டம் உயர்வதால் 2040-ம் ஆண்டுக்குள் மும்பை 10 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிலத்தை இழந்து மூழ்கும் அபாயத்தில் உள்ளதாக ஆய்வு அறிக்கைகள் எச்சரித்து உள்ளன. தெற்கு மும்பையின் பல பகுதிகளை 2050-ம் ஆண்டுக்குள் கடல் மூழ்கடித்து விடும் எனவும் மற்றொரு ஆய்வறிக்கை கூறுகிறது. இதனால் நகரின் முக்கிய அடையாளங்கள் மாயமாகும் வாய்ப்பு இருப்பதாக மும்பை மாநகராட்சி முன்னாள் கமிஷனர் இக்பால் சகால் கடந்த ஆண்டு எச்சரித்தார். ”வருகிற 2050-ம் ஆண்டுக்குள் கப்பரடே, நரிமன் பாயிண்ட் […]
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் கடந்த 27-ம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இவர் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் சாரணடைந்த நிலையில் சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து சுர்ஜித்தை பாளையங்கோட்டை போலீசார் கைது செய்தனர். அவரது […]
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் திருநெல்வேலி மண்டல அளவிலான வானவியல் மற்றும் வின்வெளி அறிவியல் இளைஞர் மாநாடு கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தது. தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் தமிழகம் முழுவதும் 17 வயது முதல் 22 வயதிற்குட்பட்ட இளைஞர்களிடம் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் 10 மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலங்களிலும் ஆய்வுக் கட்டுரை,போஸ்டர்கள் தயாரிப்பு,குறும்படம் தயாரிப்பு,போட்டோகிராபி,அஸ்ட்ரோ விளையாட்டுகள் உருவாக்குதல் […]
விவசாயிகளின் விளைநிலத்தை அபகரிப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்; பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கோவில்பட்டியில் நடந்தது. மாவட்டச் செயலாளர் அருமைராஜ் தலைமை தாங்கினார். . தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் சிறப்புரையாற்றினார். மாவட்ட துணைச் செயலாளர் சங்கிலிகுமார், நகர தலைவர் சிவகுருநாதன், ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், கருப்பசாமி, முத்துராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- * கோவில்பட்டி வருவாய் கோட்டத்தில் நீர்நிலைகள் நீர்வழித்தடங்கள் தனியார் காற்றாலைகளுக்கு தாரை […]
கோவில்பட்டியில் வேளாண்மை நடமாடும் மண் பரிசோதனை நிலைய வாகனம் தொடக்க விழா மற்றும் விவசாயிகளுக்கு மானிய இடுபொருட்கள் வழங்கும் விழா கோவில்பட்டி யூனியன் அலுவலக வளாகத்தில் நடந்தது. வேளாண்மை உதவி இயக்குநர் மணிகண்டன் வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கி நடமாடும் மண் பரிசோதனை நிலைய பேருந்தை தொடங்கி வைத்தார். மேலும், 1650 பயனாளிகளுக்கு கோடை உழவு மானியம், 250 […]







