100 நாள் திட்டத்தில் முறையாக வேலை: இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி அருகே ஊத்துப்பட்டி கிராமத்தில் தினமும் 20 பேருக்கு மட்டும் 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்குவதை கண்டித்தும், முறையாக தினமும் 100 பேருக்கு வேலை வழங்க வலியுறுத்தியும், வனத்துறை அலுவலத்தில் சுழற்சி முறையில் வேலை வழங்க வலியுறுத்தியும் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஊத்துப்பட்டி கிளைச்செயலாளர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்..ஆர்பாட்டத்தில் தாலுகா செயலாளர் பாபு, நகரச் செயலாளர் செந்தில் ஆறுமுகம், துணைச் செயலாளர்கள் விஜயலட்சுமி, அலாவுதீன்,நகரக்குழு செல்லையா,பொருளாளர் சீனிவாசன் மற்றும் ஊத்துப்பட்டி கிராம மக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகனிடம் கோரிக்கை மனு வழங்கினர்.








