ஆசிரியர்களுக்கு கிரீடம் சூட்டி கவுரவப்படுத்திய நகராட்சி பள்ளி மாணவ, மாணவிகள்
Oplus_16908288


நாடு முழுவதும் செப்டம்பர் 5ம்தேதி முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினத்தை ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது
கோவில்பட்டி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் முன்கூட்டியே இன்று 3 -ந் தேதி நடந்த ஆசிரியர் தின விழாவில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கிரீடம் சூட்டி கவுரவப்படுத்தினர்.
ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி ஆசிரியர் தின வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் முத்து முருகன் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க செயலாளர் ரமேஷ் குமார், அரசு தலைமை மருத்துவமனை இயற்கை மருத்துவர் திருமுருகன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமரன் அனைவரையும் வரவேற்றார்.
ரோட்டரி மாவட்ட சாலை பாதுகாப்பு பிரிவு தலைவர் முத்துச்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டி பேசினார்.
தமிழறிஞர் சங்கரவள்ளிநாயகம் அறக்கட்டளை தலைவர் திருமலை முத்துசாமி, ஆசிரியர்கள் பாலாஜி,சத்தியபாமா,கவிதா,செண்பகவல்லி,பொன்மலர் பாரதி, பிருந்தாதேவி,பொற்செல்வி,நர்மதா, முத்துலட்சுமி,லூர்து மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முடிவில் ஆசிரியை மீனா நன்றி கூறினார்.







