கோவில்பட்டி மாணவரை பாதி வழியில் இறக்கி விட்ட ஆம்னி பஸ் நிறுவனத்துக்கு ரூ.2. 10 லட்சம் அபராதம்
கோவில்பட்டியை சேர்ந்த ரூபன் பவுல் என்ற கல்லூரி மாணவர் கடந்த ஜனவரி மாதம் கோவில்பட்டியில் இருந்து 500 ரூபாய் டிக்கெட் எடுத்து தனியார் ஆம்னி பஸ்சில் பயணம் செய்தார்.
கோவை காருண்யா நகருக்கு டிக்கெட் எடுத்து பயணம் செய்து அவரை கோவை காந்திபுரத்தில் பஸ் கண்டக்டர் இறக்கி விட்டதாக கூறப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கி உள்ளது.
அதன்படி கல்லூரி மாணவரைபாதியில் இறக்கி விட்ட தனியார் ஆம்னி பஸ் நிறுவனத்துக்கு ரூ.2,10,135 அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த தொகையை பாதிக்கப்பட்ட மாணவருக்கு 2 மாதத்தில் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்







