பிக் பாஸ் தமிழ் சீசன் 10: சமூக வலைதளங்களில் வைரலாகும் ஆண் போட்டியாளர் பட்டியல்
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ வான ‘பிக்பாஸ் ’ வீட்டிற்குள் நுழையப்போகும் பிரபலங்கள் யார் யார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே தற்போதே காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இந்த நிலையில், இதில் கலந்துகொள்ள உள்ளதாகக் கூறப்படும் ஆண் போட்டியாளர்களின் பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 7 ஆண்டுகளாக ‘பிக்பாஸ்’ தமிழ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். 7-வது சீசனுடன் கமல்ஹாசன் விலகியநிலையில், 8 மற்றும் 9-வது சீசனை முன்னணி நடிகரான விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இப்போது 10வது சீசன் தொட ங்க இருக்கிறது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 மிகப் பிரம்மாண்ட தொடக்க விழா வரும் செப்டம்பர் 6 அன்று மாலை 6 மணி முதல் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது. வழக்கம் போல் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சியை பார்வையாளர்கள் கண்டு மகிழலாம். இந்த முறை ஓடிடி தளமான ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் இந்நிகழ்ச்சி ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.
வீட்டிற்குள் நுழையப்போகும் பிரபலங்கள் யார் யார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே தற்போதே காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இந்த நிலையில், இதில் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படும் ஆண் போட்டியாளர்களின் பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதன்படி, சின்னத்திரை நடிகர் நவீன் குமார், ஆர்யன், வினோத் பாபு, புவியரசு, குரேஷி. பார்கவ் ராம், இன்ஸ்டா பிரபலம் ராஜ்பிரியன், டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் மற்றும் திரைப்பட விமர்சகர் பிரசாந்த் உள்ளிட்டோர் இந்த சீசனில் பங்கேற்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுபற்றி வெளியாகவில்லை.







