தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ‘காவலர் வீர வணக்க நாள்’
இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில் நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் பணியில் வீர மரணம் அடைந்த அனைத்து காவலர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 21ம் தேதி வீர வணக்க நாளாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று (21.10.2026) தூத்துக்குடி மாவட்டம், தெற்கு காவல் நிலையத்தில் உள்ள காவலர் நினைவு சின்னத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தரா. சிவ பிரசாத் நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் பணியில் தன்னுயிர் நீத்த காவலர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அவரைத் தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகள், காவல் ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.







