`திஷார் ஈவென்ட்ஸ்’ தொடக்கம்; பாடல், நடனம், சாண்டா கிளாஸ் வேட போட்டிகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்-டிசம்பர் 12-ந்தேதி நடக்கிறது
திஷார் ஈவென்ட்ஸ் வெப்சைட்டை தொழில் அதிபர் முகமது ரியாஸ் தொடங்கி வைத்த காட்சி. அருகில் பிரைனா, செல்வலட்சுமி உள்ளனர்.


ஹில் சாரிட்டி நிறுவனர் பிரைனா பிரேம் பிரபாகரன் மற்றும் , கைரா டெக்னாலஜிஸ் நிறுவனர் செல்வலட்சுமி சிவந்திராஜா ஆகியோர் இணைந்து `திஷார் ஈவென்ட்ஸ்’ என்ற நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்கள்.
தொகுத்து வழங்குதல், ஒருங்கிணைத்துக் கொள்ளுதல், கொண்டாடுதல் என்ற அடிப்படையில் ஒவ்வொருவரின் திறமைகளை அங்கீகரிக்கும் வகையில் மாவட்ட வாரியாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விதமான போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கி பெருமைப்படுத்தும் விதமாக இந்த நிறுவனம் செயல்பட இருக்கிறது.
அந்த வகையில் நிறுவனத்தின் லோகோ மற்றும் அடுத்தடுத்து நடக்க இருக்கும் போட்டிகளின் லோகோ மற்றும் டீசர்கள் வெளியிடும் நிகழ்ச்சி திருநெல்வேலி ராயல் பார்க் ஓட்டலில் நடைபெற்றது.


பிரபல தொழில் அதிபரும் பிசினஸ் நெட்வொர்க்கிங் இந்தியா (BNI) அமைப்பின் தேசிய பயிற்சியாளருமான முகமது ரியாஸ், திஷார் ஈவென்ட்ஸ் நிறுவன லோகோ மற்றும் www.thezarevents.com என்ற வெப்சைட் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.
விழாவில் முகமது ரியாஸ் பேசுகையில்,” பெண் தொழில் முனைவோர் இருவர் இணைந்து இந்த நிறுவனத்தை தொடங்கி இருப்பது பாராட்டுக்குரியது. இந்த நிறுவனம் தனித்துவமாக செயல்பட்டு வெற்றிகரமாக இயங்க வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டார்.

நிறுவனத்தின் முதல் நிகழ்ச்சியாக டிசம்பர் 12ந்தேதி திருநெல்வேலியில் Christmas Carol fiesta-2026 என்ற பெயரில் பாடல், நடனம் மற்றும் சாண்டா கிளாஸ் வேடமணியும் போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது.
சிறுவர், இளைஞர் தனி நபர் பாடல், குரூப் பாடல், தனி ஒருவர் நடனம், குரூப் நடன போட்டிகள் தனித்தனியாக நடத்தப்படும். சிறப்பு போட்டியாக சாண்டா கிளாஸ் வேடமணிந்து வருவதுடன் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துதல் போட்டி நடக்கும்.
இந்த போட்டிகளில் கலந்து கொள்வோர் www.thezarevents.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளவேண்டும். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது,. ஒவ்வொரு போட்டிக்கும் ரூ.5 ஆயிரம், 10 ஆயிரம், 15 ஆயிரம் ,20 ஆயிரம் என ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்,
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சிக்கு உரிய லோகோ மற்றும் டீசர் ஆகியவற்றை பெருமாள்புரம் கிறிஸ்தவ ஆலய பாதிரியார் ஸ்டீபன் முல்லர் வெளியிட்டு ஆசீர்வாதம் வழங்கினார்.

இதை தொடர்ந்து சமையல் போட்டிக்கான லோகோ மற்றும் டீசர், பிரபல சமையல் கலை வல்லுநர் எம்.செல்வகுமார் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

விழாவின் போது சிறப்பு விருந்தினர் முகமது ரியாசுக்கு ஹில் சாரிட்டி நிர்வாகி பிரேம் பிரபாகரன், பாதிரியார் ஸ்டீபன் முல்லருக்கு tn96news நிறுவனர் திருப்பதிராஜன், சமையல் கலை வல்லுநர் செல்வகுமாருக்கு திஷார் ஈவென்ட்ஸ் நிர்வாகிகள் பிரைனா, செல்வலட்சுமி ஆகியோர் சால்வை அணிவித்தனர். முன்னதாக சிறப்பு விருந்தினர்கள் அறிமுக வீடியோ காட்சிகள் ஒளிபரப்பானது.







