தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை சென்னை எழும்பூர் தேஜஸ் எக்ஸ்பிரஸ், குருவாயூர் சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ்’ உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- * கோவை- நாகர்கோவில், நாகர்கோவில் – கோவை, -எக்ஸ்பிரஸ் ரெயில்கள், நாளை (1-ந்தேதி) மற்றும் 6, 8, 11, 13, 15 ஆகிய தேதிகளில் விருதுநகர், காரைக்குடி, திருச்சி, கரூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதால், திருமங்கலம், மதுரை, கொடைக்கானல் […]
தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீஸ் படையினர் ஆத்தூர், புல்லாவெளி கடற்கரைப் பகுதியில் இன்று அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது புல்லாவெளியில் இருந்து கடற்கரைக்கு செல்லும் வழியில் இலங்கைக்கு பீடி இலைகளை கடத்துவதற்காக ஒரு லோடு வண்டி வந்துள்ளது. போலீசார் அந்த லோடு வண்டியை நிறுத்த முயன்றபோது, டிரைவர் நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனையடுத்து போலீசார் அந்த வண்டியை விரட்டிச் சென்று தூத்துக்குடி சிப்காட் […]
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நேற்று நடைபெற்ற முத்துராமலிங்க தேவரின் குருபூஜையில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக கலந்துகொண்டனர்.இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், ‘அதிமுகவில் இருந்து என்னை நீக்கினால் மகிழ்ச்சிதான்’ என்றும் தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் , சேலத்தில் முக்கிய நிர்வாகிகளை இன்று அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். இந்த சந்திப்பை தொடர்ந்து, அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்படுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு […]
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பிரமலைக்கள்ளர் மகளிர் அணி கூட்டமைப்பு சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 113 வது ஜெயந்தி விழாவும், 63வது குருபூஜையும் பற்றிய கருத்தரங்கம் நிலக்கோட்டை பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு ராஜாராம் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கத்தில் சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் கலந்து கொண்டு பேசியதாவது:- இந்தியாவிலேயே முதன்முதலாக சுதந்திரப் போராட்டத்திற்காக பல உயிர்களைப் பலி கொடுத்த ஒரு ஒப்பற்ற சமூகம், அப்படிப்பட்ட சமூகம் இன்றைக்கு பல்வேறு […]
மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட இடத்தை நில அளவை செய்து உரியவர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடந்தது. தென்மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத் திறனாளி முன்னேற்ற சங்கம் சார்பில் நடந்த இந்தப் போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பேர்சில் தலைமை தாங்கினார்.. மாவட்ட செயலாளர் அழகுலட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் ஜேம்ஸ், கோவில்பட்டி வட்டார தலைவர் வீரபத்திரன் மற்றும் திரளான மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு, தாலுகா அலுவலகத்தின் வாசலில் […]
பசும்பொன் முத்துராமலிங்கத் 118வது தேவர் ஜெயந்தியை முன்னிட்டு கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகில் பசும்பொன் தேவர் இளைஞரணி தேவர் சமுதாய சங்கம் சார்பாக அன்னதானம் நடைபெற்றது. அன்னதானத்தை கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, பசும்பொன் கல்வி அறக்கட்டளை தலைவர் பரமசிவம் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை பசும்பொன் தேவர் இளைஞர் அணி தேவர் சமூக நல சங்கம், பிஎம்டி சார்பாக வேல்முருகன், ராமச்சந்திரன், மணி, யோகமாஸ்டர் முருகன், சுவாதி, ராஜா ஆகியோர் செய்திருந்தனர். கோவில்பட்டி […]
தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று நோக்கத்தில் தேவர் சன்னதியில் சபதம் மேற்கொண்டிருக்கிறோம் என ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், டிடிவி தினகரன் இணைந்து கூட்டாக அறிவித்துள்ளனர். முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகிய மூவரும் இணைந்து பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். ஓ.பன்னீர்செல்வம் , செங்கோட்டையன் இருவரும் மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு ஒரே காரில் […]
டிரைவர் இல்லாத கார் பெங்களூருவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள விப்ரோ, இந்திய அறிவியல் நிறுவனம் ஆகியவற்றுடன் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியை சேர்ந்த 6 மாணவர்கள் அடங்கிய குழுவினர் இந்த டிரைவர் இல்லாத தானியங்கி காரை வடிவமைத்துள்ளனர். இந்த கார் முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் தயார் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு முதல் இந்த கார் தயாரித்து பல்வேறு கட்ட சோதனை ஓட்டங்கள் நடைபெற்றது. குறிப்பாக குறுகலான சாலையில் எப்படி இயங்கும்?, சாலைகளின் குறுக்கே நாய்கள், […]
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த நாள் விழா; கோவில்பட்டியில் சிலைக்கு மாலை அணிவித்து
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 118 வது தேவர் ஜெயந்தியை முன்னிட்டு கோவில்பட்டி பழைய பஸ் நிலையம் எதிரில் உள்ள தேவர் திருவுருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு, தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்கம் சார்பாக நிறுவனத் தலைவர் செல்லத்துரை (எ) செல்வம் ஏற்பாட்டில் அன்னதானம் நடைபெற்றது. .அன்னதானத்தை கடம்பூர் ராஜு […]
கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஊரணி தெரு ஆரம்பசுகாதார மையத்தின் மூலம் வைட்டமின் ஏ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெற்றது. பள்ளி முதல்வர் பிரபு முகாமை துவக்கி வைத்தார். செவிலியர் முத்துலட்சுமி குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார். இது பொதுவாக 9 மாதங்கள் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளை மையமாக கொண்டு தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை மூலமாக வழங்கப்படுகிறது வைட்டமின் ஏ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சப்ளிமெண்ட் களை […]







