தேவர் ஜெயந்தி: கோவில்பட்டியில் அன்னதானம்
பசும்பொன் முத்துராமலிங்கத் 118வது தேவர் ஜெயந்தியை முன்னிட்டு கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகில் பசும்பொன் தேவர் இளைஞரணி தேவர் சமுதாய சங்கம் சார்பாக அன்னதானம் நடைபெற்றது.

அன்னதானத்தை கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, பசும்பொன் கல்வி அறக்கட்டளை தலைவர் பரமசிவம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை பசும்பொன் தேவர் இளைஞர் அணி தேவர் சமூக நல சங்கம், பிஎம்டி சார்பாக வேல்முருகன், ராமச்சந்திரன், மணி, யோகமாஸ்டர் முருகன், சுவாதி, ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.

கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் எதிரில் உள்ள தேவர் சிலைக்கு தமிழ் பேரரசு கட்சி சார்பாக தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் வேல்முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.







