கோவில் விழாவில் கிருஷ்ணர், ராதை வேடமணிந்த சிறுவர்- சிறுமிகள்

கோவில்பட்டி ஜமீன் பேட்டை தெருவில் உள்ள காசி விஸ்வநாதர் சமேத
விசாலாட்சி அம்பாள்
கோவிலில் கிருஷ்ண
ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
சுவாமி மற்றும் அம்பாளுக்கு
18வகையான சிறப்பு
அபிஷேகங்கள் நடைபெற்றது. சிறப்பு பூஜைகளை பூமாதேவி கோவில் அர்ச்சகர் செல்வ சுப்பிரமணியன் சுவாமி நடத்தி வைத்தார்.

கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, ஏராளமான சிறுவர், சிறுமிகள் ராதை மற்றும் கிருஷ்ணர் வேடமணிந்து வந்து இருந்தனர். அவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். வேடமணிந்து வந்த அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அனைத்து வணிக சங்கங்களின் பேரமைப்பின் மேற்கு மாவட்ட தலைவர் மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பி.தங்கமணி கலந்து கொண்டார். மேலும் வீரமணிசுவாமி, சங்கர். விஜயா. குமார். அருணாசலம். விஸ்வநாதன் மற்றும் முத்து ஜோதி மீனா படம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.







