கோவில்பட்டி நகராட்சி பள்ளி மாணவிகள் கபடி போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை
Oplus_16908288
தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் நடத்தும் தூத்துக்குடி மாவட்ட பள்ளி மாணவிகளுக்கான கபடி போட்டி நாலூமாவடி காமராஜ் பள்ளியில் நடைபெற்றது.
இப்போட்டியில் கோவில்பட்டி காந்திநகர் நகராட்சி பள்ளி மாணவிகள் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான கபடி போட்டியில் பங்கேற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இறுதிப் போட்டியில் தூத்துக்குடி தஸ்நேவிஸ் பள்ளி அணியுடன் மோதிய கோவில்பட்டி நகராட்சி உயர்நிலைப் பள்ளி அணி மோதியது.

இதில் 44 புள்ளிகள் பெற்று தஸ்நேவிஸ் அணி முதலிடம் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. கோவில்பட்டி நகராட்சி உயர்நிலை பள்ளி அணி 16 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பையை அர்ஜுனா விருது பெற்ற இந்திய கபடி வீரர் மணத்தி கணேசன் மற்றும் இயேசு விடுவிக்கிறார் மோகன் சி லாசரஸ் ஆகியோர் வழங்கினார்கள்.







