முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக ஐதராபாத்தில் பங்களா ஒன்று உள்ளது. ஐதராபாத் ஸ்ரீநகர் காலனியில் உள்ள இந்த வீட்டுக்கு பல ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தப்படாமல் இருந்துள்ளதாக தெரிகிறது. இதை தொடர்ந்து ஐதராபாத் மாநகராட்சி சார்பில் நேற்று ஜெயலலிதாவின் வீட்டுக்கு சீல் வைத்துள்ளனர். ரூ.1.60 கோடி அளவுக்கு சொத்து வரி நிலுவையில் இருந்து வந்த நிலையில் அது தொடர்பாக பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், வரி கட்டப்படாமல் இருந்துள்ளது. இதை தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகத்தினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக […]
கோவில்பட்டி நாடார் உறவின் முறைக்கு சங்கத்திற்கு பாத்தியப்பட்ட கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மழலைகளுக்கான 44 வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் எம்.எஸ்.எம்.ஆர். ரமேஷ் வழிகாட்டுதலின்படி கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க உபதலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். சங்கம் செயலாளர் ஜெயபாலன், பொருளாளர் சுரேஷ்குமார், உறுப்பினர் ராஜேந்திரபிரசாத், பத்திரகாளியம்மன் கோவில் தர்மகர்த்தா மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிச் செயலாளர் அட்வகேட் செல்வம், பொருளாளர் பாஸ்கரன் உறுப்பினர்கள் […]
கோவில்பட்டியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூபாய் 15,000 மதிப்புள்ள பெரிய சைஸ் எக்ஸ் ரே கவர் 500 , சிறிய சைஸ் எக்ஸ் – ரே கவர் 4500 ஆகியவை நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்திய கலாச்சார நட்புறவு கழக மாநில துணைத்தலைவரும், பைரவா மஹால் உரிமையாளருமான அபிராமி பி.முருகன், தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது. நிகழ்வில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க தமிழரசன், உதவி மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சுதா, தலைமை […]
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக கோவில்பட்டியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வேட்பாளர் கடம்பூர் சி ராஜூக்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி நேற்று இரவு வாக்கு சேகரித்தார். திருநெல்வேலி மாவட்டத்தில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு கோவில்பட்டி வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு கூட்டணி கட்சியினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய ஜனநாயக கட்சியின் சார்பாக 25க்கும் மேற்பட்ட நிர்வாகிகளால் வரவேற்பளித்தனர். இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைவர் […]
கோவில்பட்டி,கோ.வெங்கடசுவாமி கல்லூரி செயலர் பி.மகேந்திரன், கல்லூரி முதல்வர் எம்.சுப்புலட்சுமி மற்றும் இயக்குநர் பா.மகேஷ்குமார் ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில் கல்லூரியின் இளையோர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கம் தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்ட கிளை சார்பாக போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக, இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தூத்துக்குடி கிளை இயக்குநர் வசீகரன் கலந்துகொண்டார். தொடந்து, கோவில்பட்டி அரசு மருத்துவமனையின் மருத்துவர், த சீனிவாசகன், வழக்கறிஞர். ம ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர் […]
தூத்துக்குடி மாவட்ட அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம்; கோவில்பட்டியில் எடப்பாடி பழனிச்சாமி வாக்கு சேகரிப்பு
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ந் தேதி நடக்கிறது, இதையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பிரசாரத்தை மார்ச் 25 அன்று தொடங்கினார் . ஏப்ரல் 1 -ந் தேதி வரை அவர் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சென்னை மயிலாப்பூரில் பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி பழனிச்சாமி 28ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் திருவெற்றியூரில் அதிமுக வேட்பாளர் ஆதரித்து பிரசாரம் செய்தார் 29ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் […]
தவெக தலைவர் விஜய்க்கு ரூ.404 கோடி மதிப்பில் அசையும் சொத்துகள், ரூ.241 கோடிக்கு அசையா சொத்துகள் என்று மொத்தம் ரூ.645 கோடிக்கு சொத்துகள் இருப்பது வேட்பு மனு மூலம் தெரிய வந்திருக்கிறது. நடிகர் விஜய் தவெக என்ற கட்சியை ஆரம்பித்து 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து உள்ளார். பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிடும் விஜய், பெரம்பூர் தொகுதியில் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் . எந்த ஒரு வேட்பாளராக இருந்தாலும் வேட்பு […]
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு வருகிற ஏப்ரல் 23-ந்தேதி நடக்கிறது இதையொட்டி வேட்பு மனு தாக்கல் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. வருகிற 6-ந்தேதி வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். அன்று மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் உருவாக்கப்பட்டு உள்ளது. அந்த அலுவலகங்களில் இன்று காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்கள் […]
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்நிலையில், பெரம்பூர் தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்த விஜய், அந்த தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். பெரம்பூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட விஜய், அங்கிருந்து நேராக கொளத்தூர் தொகுதிக்கு சென்று பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். இதற்காக விஜய்யின் பிரசார வாகனம் கொளத்தூர் நோக்கி சென்ற நிலையில், அவரது வாகனத்தை […]
கோவில்பட்டிசட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக வக்கீல் பாண்டி அறிவிக்ப்பட்டவுடன் தனது பிரசாரத்தை தொடங்கி விட்டார். தினமும் ஒவ்வொரு பகுதிக்கு சென்று தெரு தெருவாக வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்,. இந்த் நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் தொடக்க நாளிலேயே தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.. இதற்காக அவர் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஊர்வலமாக வந்தார். கோவில்பட்டி பஸ் நிலையம் அருகில் இருந்து வேட்பாளர் பாண்டி ஊர்வலமாக புறப்பட்டார். ஊர்வல […]







