போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோவில்பட்டி,கோ.வெங்கடசுவாமி கல்லூரி செயலர் பி.மகேந்திரன், கல்லூரி முதல்வர் எம்.சுப்புலட்சுமி மற்றும் இயக்குநர் பா.மகேஷ்குமார் ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில் கல்லூரியின் இளையோர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கம் தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்ட கிளை சார்பாக போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக, இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தூத்துக்குடி கிளை இயக்குநர் வசீகரன் கலந்துகொண்டார்.
தொடந்து, கோவில்பட்டி அரசு மருத்துவமனையின் மருத்துவர், த சீனிவாசகன், வழக்கறிஞர். ம ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர் மற்றும் மனோதத்துவ நிபுணர் கி.ஷெர்லி டுவிங்கிள் ஆகியோர் கலந்து கொண்டு இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் முதலாம், இரண்டாம் மற்றும் முன்றாம் ஆண்டு உறுப்பினர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு சிறப்புரையாற்றினர்கள்.
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரி இளையோர் செஞ்சிலுவை சங்க ஒருங்கினைப்பாளர், கு.மாரியப்பன் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.








