கோவில்பட்டியில் புத்தக திறனாய்வு , ஆசிரியர்களுக்கு விருது வழங்குதல், ரக் ஷா பந்தன் விழா
Oplus_16908288
கோவில்பட்டி இலக்கியச் சாரல் அமைப்பின் புத்தகத் திறனாய்வு , சாதனை ஆசிரியர்களுக்கு ஆசிரிய செம்மல் விருது வழங்குதல் , மற்றும் பிரம்ம குமாரிகள் அமைப்பின் ரக் ஷா பந்தன் ஆகிய முப்பெரும் விழா கோவில்பட்டி கி.ரா.நினைவரங்கத்தில் நடைபெற்றது.
நல்லாசிரியர் ஜான்கணேஷ் தலைமை தாங்கினார். இசை எப் எம். சுரேஷ்குமார், முனைவர் பிரபு, வரகவி நல்லாசிரியர் முருகேசன் ,கழுகுமலை திருவள்ளுவர் கழக பொன்ராஜ் பாண்டியன் , எழுத்தாளர் பொன்னுராசு, முனைவர் செல்வம் , சுப்புலட்சுமி மற்றும் ரெங்க லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழாசிரியை குருலட்சுமி வரவேற்று பேசினார். உரத்த சிந்தனை அமைப்பினால் ‘படைப்புச் செம்மல்’ விருதுபெற்ற
கவிஞர் தத்துவம், கே.ஆர்.பி.மணிமொழிச்செல்வனின் ‘மாண்புமிகு மனைவி’
என்ற புத்தகத்தை முனைவர் முருகசரஸ்வதி ,செல்வி ராஜலட்சுமி, கிருஷ்ணன் ,மற்றும் ஆசிரியர் செந்தில்குமார் ஆகியோர் திறனாய்வு செய்தனர்.
நிறுவனர் தினகரன் சாதனை ஆசிரியர்கள் மணிமொழி நங்கை , கண்ணகி, ராஜலட்சுமி , பேராசிரியை சிவசங்கரி, ஸ்ருதி ,தங்கத்துரையரசி ஆகியோருக்கு ஆசிரிய செம்மல் விருது வழங்கினார்.
கவிஞர் போத்திராசு நன்றி கூறினார்.
பிரம்மகுமாரிகள் அமைப்பின் இந்திராணி தலைமையில் அனைவருக்கும் ரக் ஷா பந்தன் கட்டப்பட்டது.
.







