தூத்துக்குடி மாவட்ட அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம்; கோவில்பட்டியில் எடப்பாடி பழனிச்சாமி வாக்கு சேகரிப்பு




தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ந் தேதி நடக்கிறது, இதையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பிரசாரத்தை மார்ச் 25 அன்று தொடங்கினார் . ஏப்ரல் 1 -ந் தேதி வரை அவர் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
சென்னை மயிலாப்பூரில் பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி பழனிச்சாமி 28ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் திருவெற்றியூரில் அதிமுக வேட்பாளர் ஆதரித்து பிரசாரம் செய்தார்

29ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் பிரசாரம் மேற்கொண்டார்.
அதைத் தொடர்ந்து இரவில் கோவில்பட்டி வந்த எடப்பாடி பழனிச்சாமி அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜுவை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்
மேலும்விளாத்திகுளம்,தூத்துக்குடி ஸ்ரீ வைகுண்டம் தொகுதி அதிமுக வேட்பாளர்கள் மற்றும் ஓட்டப்பிடாரம் அமமுக வேட்பாளர் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார்.








