இளையரசனேந்தலில் ஊட்டச்சத்து வார விழா விழிப்புணர்வு பேரணி

சமச்சீர் உணவு,சரியான ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திட இந்தியாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 1 முதல் 7ம் தேதி வரை தேசிய ஊட்டச்சத்து வார விழா கொண்டாடப்படுகிறது
அந்த வகையில் கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த தேசிய ஊட்டச்சத்து வார விழாவில் மாணவர்கள் குப்பை உணவுகளை தவிர்த்து ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளவும்,அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தால் பள்ளியில் வழங்கப்படும் சத்து மாத்திரைகளை தவறாது உட்கொள்ளவும்,ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகத்தை உருவாக்கிடவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சியில் காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள விளக்கு,சிறுதானியங்கள்,கொழுக்கட்டை வகைகள்,பயறு வகைகள்,கீரை வகைகள்,முட்டை,சத்துமாவு வகைகள் உள்ளிட்ட பொருட்களை பார்வையிட்டனர்.
பின்னர் பள்ளியில் தொடங்கிய தேசிய ஊட்டச்சத்து வார விழா விழிப்புணர்வு பேரணியில் கையில் பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தனர்.
ஊட்டச்சத்து வினாடிவினா போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் முத்து முருகன் தலைமை தாங்கினார்..பள்ளி தலைமை ஆசிரியர் மரிய செல்வி.சமூக தணிக்கை மாவட்ட வள அலுவலர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க செயலாளர் ரமேஷ் குமார் அனைவரையும் வரவேற்றார்.
குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட வட்டார அலுவலர் திலகா, இளையரசனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் சக்தி ரஞ்சன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து பேசினர். காய்கறிகளால் செய்யப்பட்ட குத்துவிளக்கினை ஏற்றி வைத்து தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தனர்.
ரோட்டரி சங்க துணைத் தலைவர் கண்ணன்,சுகாதார ஆய்வாளர் பாலசுப்ரமணியன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர்கள் பாலம்மாள்,பேச்சியம்மாள்,திலகராணி, உள்பட அங்கன்வாடி பணியாளர்கள்,மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்,முடிவில் உதவி தலைமையாசிரியை முருகசரஸ்வதி நன்றி கூறினார்.







