கோவில்பட்டியில் எடப்பாடி பழனிசாமிக்கு இந்திய ஜனநாயக கட்சி சார்பில் வரவேற்பு
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக கோவில்பட்டியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வேட்பாளர் கடம்பூர் சி ராஜூக்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி நேற்று இரவு வாக்கு சேகரித்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு கோவில்பட்டி வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு கூட்டணி கட்சியினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய ஜனநாயக கட்சியின் சார்பாக 25க்கும் மேற்பட்ட நிர்வாகிகளால் வரவேற்பளித்தனர்.
இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைவர் பாலமுருகன், செயலாளர் வெங்கடசுப்பிரமணியன், பொருளாளர் கோபாலகிருஷ்ணன், இளைஞரணி தலைவர் வினோத் கண்ணா, ஒன்றிய செயலாளர் கணபதி,.வெற்றிவேல் மாவட்ட பொறுப்பாளர் போத்திராஜ், வர்த்தக அணி செயலாளர் கே கே சி கண்ணதாசன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்








