கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு எக்ஸ் – ரே கவர் வழங்கும் நிகழ்வு
கோவில்பட்டியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூபாய் 15,000 மதிப்புள்ள பெரிய சைஸ் எக்ஸ் ரே கவர் 500 , சிறிய சைஸ் எக்ஸ் – ரே கவர் 4500 ஆகியவை நன்கொடையாக வழங்கப்பட்டது.

இந்திய கலாச்சார நட்புறவு கழக மாநில துணைத்தலைவரும், பைரவா மஹால் உரிமையாளருமான அபிராமி பி.முருகன், தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது.
நிகழ்வில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க தமிழரசன், உதவி மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சுதா, தலைமை செவிலியர் லட்சுமி காந்தம், பகத்சிங் ரத்ததான கழக நிர்வாகிகள் மா காளிதாஸ், லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.








