சென்னை தியாகராய நகரில் மழை நீர் தேங்கிய பகுதிகளில் அமைச்சர் ஆனந்த் ஆய்வு


சென்னை தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான ஆனந்த், வடகிழக்குப் பருவமழையின் காரணமாக தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, இருசக்கர வாகனத்தில் தொகுதி முழுவதும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, மழைநீர் தேங்கியுள்ள இடங்களைக் கண்டறிந்து, அப்பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

மேலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், மழைநீர் தேங்கும் பகுதிகளில் விரைந்து நடவடிக்கை எடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டக் தவெக செயலாளர் அப்புனு (எ) வேல்முருகன், அரசு அலுவலர்கள், பகுதி கழகச் செயலாளர்கள், வட்டக் கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் அமைச்சருடன் சென்று இருந்தனர்.







