கோவில்பட்டி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வக்கீல் பாண்டி ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல்


கோவில்பட்டிசட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக வக்கீல் பாண்டி அறிவிக்ப்பட்டவுடன் தனது பிரசாரத்தை தொடங்கி விட்டார். தினமும் ஒவ்வொரு பகுதிக்கு சென்று தெரு தெருவாக வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்,.
இந்த் நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் தொடக்க நாளிலேயே தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.. இதற்காக அவர் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஊர்வலமாக வந்தார்.

கோவில்பட்டி பஸ் நிலையம் அருகில் இருந்து வேட்பாளர் பாண்டி ஊர்வலமாக புறப்பட்டார். ஊர்வல தொடக்கத்தில் இரட்டை மாட்டு வண்டியில் தொண்டர்கள், ஏர் கலப்பைகள் மற்றும் கட்சி கொடியேந்தியபடி நிற்க, பின்தொடர்ந்து வேட்பாளர் பாண்டி மற்றும் தொகுதி பொறுப்பாளர் சத்தியமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் நடந்து வந்தனர்,
கலைக்குழுவினர் மேளதாளம் முழங்க ஊர்வலம் மெயின் ரோடு,வழியாக ஆர்.டி.ஓ.அலுவலகத்தை அடைந்தது,. அங்கு தேர்தல் நடத்தும் அதிகாரியான கோட்டாட்சியரிடம் வக்கீல் பாண்டி வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.








