கோவில்பட்டி பள்ளியில் சொட்டு மருந்து முகாம்
கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஊரணி தெரு ஆரம்பசுகாதார மையத்தின் மூலம் வைட்டமின் ஏ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெற்றது.
பள்ளி முதல்வர் பிரபு முகாமை துவக்கி வைத்தார். செவிலியர் முத்துலட்சுமி குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார்.
இது பொதுவாக 9 மாதங்கள் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளை மையமாக கொண்டு தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை மூலமாக வழங்கப்படுகிறது

வைட்டமின் ஏ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சப்ளிமெண்ட் களை வழங்குகிறது. இது குழந்தைகள் பல்வேறு நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இது கண் பார்வைக்கு மிகவும் அவசியமானது. மேலும் ஜெரோப்தால்மியா கார்னியல், ஜெரோசிஸ் மற்றும் இரவு குருட்டுத் தன்மை போன்ற கண் தொடர்பான பிரச்சினைகளை தடுக்கிறது.
வைட்டமின் ஏ சொட்டு மருந்து சரியான மூளை வளர்ச்சிக்கும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமானது.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள் அனிதா, ஷர்மிளா தேவி, மாரியம்மாள், அன்னலட்சுமி, ஐஸ்வர்யம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இம்முகாம் தூத்துக்குடி மாவட்டத்தில் 28.10.2025 அன்று தொடங்கியது. 1.11.2025 வரை நடைபெறுகிறது.







