இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகள், கோவில்பட்டி ஒன்றியத்தில் இணைகிறது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள பிச்சைதலைவன்பட்டி அப்பனேரி, வடக்குபட்டி, நக்கலமுத்தன்பட்டி, ,பிள்ளையார்நத்தம், அய்யநேரி, ஜமீன்தேவர்குளம், சிதம்பரம்பட்டி, புளியங்குளம், இளையரசனேந்தல், வெங்கடாசலபுரம், முக்கூட்டுமலை ஆகிய 12 ஊராட்சிகள் தூத்துக்குடி மாவட்டத்துடன் இருந்த போதிலும் ஊரக வளர்ச்சி துறை மட்டும் தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து வந்தது.
தென்காசி மாவட்டம் பிரிப்பதற்கு முன்பு நெல்லை மாவட்டத்துடன் இருந்தது. தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்ட போது இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகளின் ஊரக வளர்ச்சி துறை தென்காசி மாவட்டத்துடன் தொடரும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.

இதற்கிடையில் இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகள் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் நீடிக்க வேண்டும் என்ற அரசாணையை ரத்து செய்ய கோரி தேசிய விவசாயிகள் சங்க தலைவர் ரெங்கநாயகலு, ஜெயபிரகாஷ் நாராயணசாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், குமாரப்பன் ஆகியோர் தலைமையான பெஞ்ச் இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகள் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் நீடிக்க வேண்டுமென்ற அரசாணை ரத்து செய்யப்படுவதாக உத்தரவிட்டுள்ளனர்
இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க ஏற்கனவே கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றுப்பட்டுள்ளதாகவும், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துறை இயக்குனருக்கு இது அனுப்பப்பட்டிருப்பதாகவும், மூன்று மாதங்களுக்குள் உத்தரவுகள் நிறைவேற்றப்படும் என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

17 ஆண்டுகளுக்கு மேலாக போராடிவரும் இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் இதன் மூலம் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேசிய விவசாயிகள் மற்றும் இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்பு குழுவுக்கு கிடைத்த மகத்தான வெற்றி







