பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த நாள் விழா; கோவில்பட்டியில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 118 வது தேவர் ஜெயந்தியை முன்னிட்டு கோவில்பட்டி பழைய பஸ் நிலையம் எதிரில் உள்ள தேவர் திருவுருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு, தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்கம் சார்பாக நிறுவனத் தலைவர் செல்லத்துரை (எ) செல்வம் ஏற்பாட்டில் அன்னதானம் நடைபெற்றது.
.அன்னதானத்தை கடம்பூர் ராஜு எம்எல்ஏ தொடங்கி வைத்தார்., அதிமுக நகரச்செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி, அழகர்சாமி,அன்புராஜ், வண்டானம் கருப்பசாமி, போடுசாமி, மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கவியரசன், வழக்கறிஞர் சங்கர் கணேஷ், நகர்மன்ற உறுப்பினர் செண்பகமூர்த்தி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திமுக , சார்பில் கோவில்பட்டி நகர்மன்ற தலைவர், திமுக நகர செயலாளருமான கருணாநிதி, தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.நகர (கிழக்கு) பொறுப்பாளர் சுரேஷ், திமுக ஒன்றிய செயலாளர்கள் பீக்கிலிபட்டி முருகேசன், ராதாகிருஷ்ணன்,ஜெயகண்ணன், பொதுக்குழு உறுப்பினர் ராமர், பீட்டர்,ரமேஷ், செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாவட்டத் துணைச் செயலாளர் ஏஞ்சலா, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர், நகரத் தலைவர் அருண்பாண்டியன் தலைமையில், வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் காமராஜ், பிரேம்குமார், மாரிமுத்து, மாவட்ட பொதுச்செயலாளர் சண்முகராஜ் ஆகியோர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
தமாகா சார்பில் கட்சியின் வடக்கு மாவட்டத்தலைவர் ராஜகோபால் தலைமையில், நிர்வாகிகள் நிர்வாகிகள் கனி, வழக்கறிஞர் கருப்பசாமி தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

பாஜக சார்பில் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் சரவணன் கிருஷ்ணன் தலைமையில்,தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.இதில் மாவட்ட நிர்வாகிகள் வெங்கடேசன் சென்னகேசவன், சீனிவாசன், வேல்ராஜ், ராஜ்குமார்,லட்சுமணகுமார், நகரத் தலைவர் காளிதாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தேமுதிக சார்பில் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில், நகரச் செயலாளர் நேதாஜி பாலமுருகன், மாவட்ட அவைத்தலைவர் கொம்பையா பாண்டியன், செயற்குழு உறுப்பினர்கள் பிரபாகரன்,மலைராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் முத்துசெல்வம், காளிதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் சுமங்கலி ராஜா, செல்வின் சுந்தர், ஆரோக்கியராஜ், வழக்கறிஞர் கார்த்திக் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் தமிழரசன் தலைமையில். தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நிர்வாகிகள் ஞானம், மோகன், நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், இந்திய கலாசார நட்புறவு கழகம் அபிராமி முருகன், இந்திய தேசிய காங்கிரஸ் துரைராஜ், ராஜசேகர்,முருகன்,ஐயாத்துரை, மக்கள் நீதி மய்யம் ராதாகிருஷ்ணன், மனிதநேயம் மக்கள் கட்சி செண்பகராஜ், பகத்சிங் இரத்ததானக்கழகம் காளிதாஸ், இரட்டைமலை சீனிவாசனார் இயக்கம் செல்வகுமார், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்துக்குமார், HMS வினோபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை பராமரிப்பு அறக்கட்டளை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அகில இந்திய தேவர் இனமக்கள் கூட்டமைப்பு சார்பாக, நிறுவனத் தலைவர் அண்ணாதுரை தலைமையில் ஏராளமான பெண்கள் பால்குடம் ஊர்வலம் எடுத்து வந்தனர்.
உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில். மாநிலத் துணைத்தலைவர் கருத்த பாண்டி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கோவில்பட்டி சரமாரி அம்மன் கோவில் தெரு தேவர் மகாஜன சங்கம் சார்பில், தலைவர் ஆறுமுகம் தலைமையில், செயலாளர் சங்கர் குரு, பொருளாளர் வழக்கறிஞர் பழனிக்குமார் முன்னிலையில்,118 பால்குட ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் குழந்தைகள் தேவர் திருமகனார், வேலுநாச்சியார் போல மாறுவேடம் அணிந்து வந்தனர். இதில் திரளான பெண்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு முக்குலத்தோர் அமைப்பு சாரா, அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ரெயில் நிலையம் விநாயகர் கோவிலில் இருந்து மாநிலச்செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில்,118 தேங்காய், பழம், வெற்றிலை,பாக்கு. பூக்கள் தட்டுடன் பெண்கள் ஊர்வலமாக வந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதே போல், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்து தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.








