கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நாகர்கோவில் பயணி தவறவிட்ட10 பவுன் நகைகள், லேப்டாப் மீட்பு; உரியவரிடம் ஒப்படைத்த போலீசுக்கு பாராட்டு
Oplus_16908288
நாகர்கோவிலில் இருந்து கோவில்பட்டிக்கு ‘அந் தோதியா எக்ஸ்பிரஸ்’ ரெயிலில் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீசுவரம்
பகுதியை சேர்ந்த மணிகண் டன் என்பவர் தனது மனைவி சுஜி மற்றும் குழந் தையுடன் பயணம் செய்தார்.
பின்னர் கோவில்பட்டியிலிருந்து பெங்களூரு செல்வதற்காக, நடை மேடை எண் 2 ல் நின்ற ‘மைசூர் விரைவு ரெயிலில்’ஏறி பயணத்தை தொடர்ந்தனர். அப்போது, அவசரத் தில் அவர்கள் கொண்டு வந்த ஒரு கருப்பு நிற தோள் பையை கோவில்பட்டி ரெயில் நிலைய நடைமேடை யிலேயே வைத்து சென்று விட்டனர். மைசூர் விரைவு ரெயில் புறப்பட்டுச் சென்ற பிறகு நடைமேடை பணியில்
இருந்த ரெயில்வே உதவி சார்பு ஆய்வாளர் மாடசாமி, கேட்பாரற்று இருந்த அந்த பையை கைப்பற்றி ஆய்வு செய்தார்.

அதிலிருந்த ஆவணங்கள் மூலம் உரியவரை தொடர் புகொண்டு தகவல் தெரி வித்தார்.
தகவலறிந்த மணிகண் டன் உடனடியாக சாத்தூர் ரெயில்நிலையத்தில் இறங்கி, மீண்டும் கோவில்பட்டி ரெயில் நிலையத்திற்கு வந்தார். பின்னர், உரிய ஆவ ணங்களை சமர்ப்பித்து, பையிலிருந்த சுமார் 10 பவுன் தங்க நகைகள், 2 லேப்டாப்கள் உள்ளிட்ட பொருட்களைப் பெற்றுக் கொண்டார்.
நேர்மையாகவும் துரிதமாகவும் செயல் பட்டுப் பொருட்களை மீட்டுக் கொடுத்த ரெயில்வே தனிப்படை மற்றும் உதவி ஆய்வாளர் மாடசாமிக்கு பயணிகள் மற்றும் பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.







