கோவில்பட்டி அரசு வளாக சாலையை சீரமைக்க ரூ. 150 லட்சத்தில் நகராட்சி திட்டம்
Oplus_16908288

கோவில்பட்டி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை
ஆணையாளர் அ.ஜஹாங்கீர் பாஷா (மு.கூ.பொ), சார் ஆட்சியருக்கு 25-8-2026 தேதியிட்ட கடிதத்தில் கூறி இருப்பதாவது :-
கோவில்பட்டி அரசு அலுவலக வளாக சாலையை சீரமைத்து தர கோருதல் – தொடர்பாக.
சார் ஆட்சியர் கடிதம் (31.7.2026) உதவி பொறியாளர் அறிக்கை நாள்(21.8.2026)பார்வை 1ல் காணும் சார் ஆட்சியர், கடிதத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் கோவில்பட்டி அரசு அலுவலக வளாக சாலையில் அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் பள்ளி நிலையங்கள் செயல்பட்டு வருவதால் அங்குள்ள சாலைகள் குண்டும் குழியுமாக பல ஆண்டுகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் அதனை சீரமைத்து தர தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி அரசு அலுவலக வளாக சாலையானது வருவாய்த்துறைக்கு சொந்தமானதாகும். பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த சாலையினை கோவில்பட்டி வருவாய் வட்டாட்சியர் கடிதம் நாள்.26.2.2025ன் படி அலுவலக வளாக சாலை இந்நகராட்சி வசம் ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சாலைக்கான Unicode சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநரால் 8.8.2025ம் தேதியன்று அனுமதி வழங்கப்பட்டு (UTIS) மென்பொருளில் நகராட்சி சாலையாக பதிவு செய்யப்பட்டது.
மேலும், மேற்கண்ட சாலையினை சீரமைக்கும் பணிக்கு ரூ.150 லட்சத்திற்கு திட்ட மதிப்பீடு (DPR) தயார் செய்யப்பட்டு நகராட்சி நிர்வாக இயக்குநர், சென்னைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிதி ஒதுக்கீடு மற்றும் நிர்வாக அனுமதி பெறப்பட்ட பின்னர் சாலை சீரமைப்பு பணிகள்
மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த கடித நகல் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசனுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக கண்டும் காணாமல் கைவிடப்பட்ட அரசு அலுவலக வளாக சாலையை சீரமைக்க கோரி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு மட்டுமின்றி பல்வேறு அமைப்புகள் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.







