கோவில்பட்டி பள்ளி மாணவர்கள், மாநில தடகள போட்டிக்கு தேர்வு
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் தூத்துக்குடி வருவாய் மாவட்ட
அளவிலான தடகளப் போட்டி கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.,
தூத்துக்குடி, திருச்செந்தூர், கயத்தாறு கோவில்பட்டி, விளாத்திகுளம்,, ஒட்டபிடாரம், ஸ்ரீவைகுண்டம், , சாத்தான்குளம் ஆகிய குறுவட்டங்களிலிருந்து மாணவ, மாணவிகள் கொண்டனர்.
இதில் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில் நீளம் தாண்டுதலில் கோவில்பட்டி செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 11 ம் வகுப்பு மாணவர் செந்தில் பிரபு இரண்டாம் இடம் பெற்றார். அதே பிரிவில் 10ம் வகுப்பு மாணவி ரேஷ்மா உயரம் தாண்டுதலில் மூன்றாமிடம் பெற்றனர்,

19 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில் உயரம் தாண்டுதலில் 12-ம் வகுப்பு மாணவர் தனுஷ்கோடி பாண்டி முதலிடம் பெற்றார். அதே பிரிவில் 12-ம் வகுப்பு மாணவி தீபிகா, நீளம் தாண்டுதலில் மூன்றாமிடம் பிடித்தார்.
19 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில் உயரம் தாண்டுதலில் முதலிடம் பெற்ற தனுஷ்கோடி பாண்டி, 17 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில் நீளம் தாண்டுதலில் இரண்டாமிடம் பெற்ற செந்தில் பிரபு ஆகியோர் , பள்ளிகளுக்கான மாநில குடியரசு தின தடகளப் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர் .
இதற்கிடையே வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் முருகன், மாலாதேவி, மரிய மைக்கேல் ஆகியோரையும் பள்ளி தாளாளர் ர.பால்ராஜ் மனுவேல், பள்ளித் தலைவர் ர.ஞானபிரகாஷ் மற்றும் பள்ளி முதல்வர் நடராஜன் உள்ளிட்டோர் பாராட்டினர் .







