கோவில்பட்டி கல்லூரியில் வாழ்க்கை பயிற்சி மற்றும் ஆலோசனை நிகழ்ச்சி

கோவில்பட்டி எஸ். எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியின் செஞ்சுருள் சங்கம் சார்பில் வாழ்க்கைப் பயிற்சி மற்றும் ஆலோசனை நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
கல்லூரிச் செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார் . கல்லூரி முதல்வர் முனைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர்கள் ஜெயசிங்கராஜ் மற்றும் சுசிலா ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். சுமார் 100 மாணவ, மாணவியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி அரசு மருத்துவமனையின் நம்பிக்கை மையம் சார்பில் ஜி. சுதா, ICTC ஆலோசகர், எஸ். சுப்புலட்சுமி, ICTC ஆலோசகர் மற்றும் எஸ். சந்தா, STI ஆலோசகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் பாலியல் கல்வி, எச்.ஐ.வி./எய்ட்ஸ், பால்வினைத் தொற்றுகள் (STI), அவற்றின் பரவும் முறைகள், தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பான மற்றும் பொறுப்பான வாழ்க்கை முறைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், தவறான நம்பிக்கைகளை தவிர்த்து சரியான சுகாதார தகவல்களை பெறுதல், உடல்நலம் மற்றும் மனநலம் தொடர்பான பிரச்சினைகளுக்கு உரிய நேரத்தில் மருத்துவ ஆலோசனை மற்றும் மனநல ஆலோசனையை பெறுதல் ஆகியவற்றின் முக்கியத்துவமும் எடுத்துரைக்கப்பட்டது.
ஆலோசகர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்ததுடன், தனிநலம், ஆரோக்கியமான உறவுகள், பொறுப்பான முடிவெடுத்தல் மற்றும் எச்.ஐ.வி./எய்ட்ஸ் மற்றும் பால்வினைத் தொற்றுகளைத் தடுப்பது குறித்தும் பயனுள்ள கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மானவி காயத்ரி வரவேற்று பேசினார். முடிவில் மானவி முனீஸ்வரி நன்றி கூறினார்.







