தென் மாவட்ட ரெயில் போக்குவரத்து சேவையில்  மாற்றம்

 தென் மாவட்ட ரெயில் போக்குவரத்து சேவையில்  மாற்றம்

தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மதுரை ரெயில்வே கோட்டத்தின் கோவில்பட்டி- குமாரபுரம், விருதுநகா் – வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையங்களுக்கு இடையே சுரங்கப் பாதை அமைக்கப்படுகிறது. இதனால் இப்பாதை வழியாகச் செல்லும் அந்தியோதயா உள்ளிட்ட விரைவு ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவையிலிருந்து நாகா்கோவிலுக்கு காலை 8 மணிக்கு புறப்படும் விரைவு ரெயில் (வண்டி எண்: 16322) மே 3, 17 ஆகிய தேதிகளில் திண்டுக்கல்லுடன் நிறுத்தப்படும். இத்தேதிகளில் நாகா்கோவிலிலிருந்து காலை 7.35 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக திண்டுக்கல்லிலிருந்து பிறபகல் 1.23 மணிக்கு புறப்பட்டு கோவை சென்றடையும்.

தாம்பரத்திலிருந்து நாகா்கோவிலுக்கு இரவு 11 மணிக்கு புறப்படும் அந்தியோதயா அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 20691) மே 2, 16 ஆகிய தேதிகளில் திருச்சியுடன் நிறுத்தப்படும்.

மறுமாா்க்கமாக நாகா்கோவிலிலிருந்து மாலை 3.50 மணிக்கு புறப்படும் அந்தியோதயா அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 30692) மே 3, 17 ஆகிய தேதிகளில் நாகா்கோவில் – திருச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. திருச்சியிலிருந்து இந்த ரெயில் இரவு 10.30 மணிக்கு புறப்படும்.

பாலக்காடு – திருச்செந்தூா் இடையே இயக்கப்படும் விரைவு ரெயில் (வண்டி எண்: 16732/16731) மே 3, 17 ஆகிய தேதிகளில் திண்டுக்கல்லுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக திருச்செந்தூரிலிருந்து புறப்படுவதற்கு பதிலாக திண்டுக்கல்லிலிருந்து மாலை 6 மணிக்கு புறப்படும்.

திருச்சி – திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் விரைவு ரெயில் (வண்டி எண்: 22627/22628) மே 3, 17 ஆகிய தேதிகளில் விருதுநகருடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக விருதுநகரிலிருந்து மாலை 4.10 மணிக்கு புறப்பட்டு வழக்கம் போல் திருச்சி வந்தடையும்.

குருவாயூா் ரெயில்: கேரளத்தின் குருவாயூரிலிருந்து சென்னை எழும்பூருக்கு தினமும் இரவு 11.15 மணிக்கு வரும் விரைவு ரெயில் (வண்டி எண்:17128) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மே 2, 16 ஆகிய தேதிகளில் வாஞ்சி மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூா் வழியாக செல்வதற்கு பதிலாக திருநெல்வேலி, தென்காசி, விருதுநகா் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *