• October 21, 2026

கோவில்பட்டியில் அகில இந்திய ஆக்கி: இன்று மாலை நடந்த 3 மற்றும் 4 வது இடத்துக்கான போட்டி முடிவுகள்

 கோவில்பட்டியில் அகில இந்திய ஆக்கி: இன்று மாலை நடந்த 3 மற்றும் 4 வது இடத்துக்கான போட்டி முடிவுகள்

கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 14 வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் மே 23ம் தேதி முதல் கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் தொடங்கியது.

10 நாட்கள் நடைபெற்ற இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மொத்தம் 16 சிறந்த அணிகள் பங்கேற்று விளையாடின. எ, பி, சி, டி என நான்கு பிரிவுகளாக பிரித்து அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

இப்போட்டிகள் கால் இறுதி ஆட்டம் வரை லீக் முறையிலும், கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையிலும் நடை பெற்றது.

போட்டியின் பத்தாம் நாளான இன்று ஜூன் 1ம் தேதி மாலை 5 மணி அளவில் நடைபெற்ற மூன்றாம் மற்றும் நான்காம் இடத்திற்கான போட்டியில் நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும்  செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரெயில்வே அணியும் மோதின.

இதில் 4:2 என்ற கோல் கணக்கில் நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வெற்றிப் பெற்று மூன்றாமிடம் பிடித்தது.

இப்போட்டியில் நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வீரர்கள் குருசிம்ரன் சிங் 10வது மற்றும் 50வது நிமிடத்திலும் (பெனால்டி கார்னர்), அபிமன்யூ 45வது மற்றும் 52வது நிமிடத்திலும் (பீல்டு கோல்) மொத்தம் 4 கோல்கள் அடித்து அணிக்கு வெற்றியை தேடி தந்து மூன்றாமிடம் பிடித்தனர்.

செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரெயில்வே அணி வீரர்கள் மணிஷ் குமார் 13வது நிமிடத்திலும் (பீல்டு கோல்) மற்றும் லவ்ப்ரீத் சிங் 55வது நிமிடத்திலும் (பீல்டு கோல்) மொத்தம் 2 கோல்கள் அடித்து நான்காமிடம் பெற்றனர்.

சுரேஷ் குமார்  மற்றும் அஜித் குமார் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வீரர் மந்தீப் மோர்-க்கு வழங்கப்பட்டது.

இரவு 7.00 மணிக்கு நடைபெற்ற இறுதி போட்டியில் நியூடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணியும் புபனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணியும் பலப்பரீட்சை நடத்தின.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *