தூத்துக்குடி மாவட்ட ஆண்கள் ஜுனியர் ஆக்கி அணி தேர்வு; கோவில்பட்டியில் 1-ந் தேதி நடக்கிறது
![தூத்துக்குடி மாவட்ட ஆண்கள் ஜுனியர் ஆக்கி அணி தேர்வு; கோவில்பட்டியில் 1-ந் தேதி நடக்கிறது](https://tn96news.com/wp-content/uploads/2023/04/500x300_1254802-10.gif)
கோவில்பட்டியில் ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு மற்றும் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி சார்பாக கே ஆர் கல்வி நிறுவனங்கள் வளாகத்தில் மாவட்டங்களுக்கு இடையிலான ஆண்கள் ஜூனியர் ஆக்கி போட்டி மே 10 முதல் 13 வரை நடக்க உள்ளது அந்த போட்டியில் நமது தூத்துக்குடி மாவட்ட அணி கலந்து கொண்டு விளையாட இருப்பதால் மாவட்ட ஆக்கி அணி தேர்வு மே 1ஆம் தேதி காலை 6.30 மணிக்கு பாண்டவர்மங்கலம் ஆக்கி மைதானத்தில் வைத்து நடக்க உள்ளது
இதில் கலந்து கொள்ளும் வீரர்கள் 1.1.2004 க்கு பின் பிறந்தவராக இருக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். அல்லது தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் பயின்று வருபவராக இருக்க வேண்டும் வீரர்கள் தேர்வில் கலந்து கொள்ள வருபவர்கள் ஆதார் பிறப்புச் சான்றிதழ் நகல் கொண்டு வர வேண்டும்.
மேற்கண்ட தகவலை ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் முனைவர். செ. குரு சித்ர சண்முக பாரதி தெரிவித்துள்ளார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)