கோவில்பட்டியில் அண்ணா சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து வடக்கு மாவட்ட செயலாளர்,சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு புதுரோட்டில் உள்ள அண்ணா திருவருவுச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் முன்னாள் எம்எல்ஏ மோகன்,பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகரச் செயலாளர் விஜயபாண்டியன்,ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, அன்புராஜ், அழகர்சாமி, செல்வக்குமார்,தலைமைக் கழக பேச்சாளர் மூர்த்தி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர், கலைப்பிரிவு மாவட்டச் செயலாளர் போடு சாமி,
மகளிர் அணி மாவட்ட செயலாளர் பத்மாவதி,ஜெ பேரவை மாவட்ட இணைச் செயலாளர் நீலகண்டன்,நகர் எம்ஜிஆர் மன்றம் முருகன்,மேற்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் அம்பிகை பாலன்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் இந்திரன், ராமர்,நகர்மன்ற உறுப்பினர்கள் வள்ளியம்மாள் மாரியப்பன்,செண்பகமூர்த்தி,ஜெ பேரவை நகரச் செயலாளர் ஆபிரகாம் அய்யாத் துரை,எட்டையாபுரம் நகரச் செயலாளர் ராஜ்குமார்,தகவல் தொழில் நுட்ப அணி சுந்தர்,பிரபாவதி மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்