குலசேகரப்பட்டினத்தில் இருந்து 2 ஆண்டுகளில் ராக்கெட் விண்ணில் ஏவப்படும்; `இஸ்ரோ’ தலைவர் நாராயணன்
இந்திய விண்வெளி ஆய்வு நிரோனம் (இஸ்ரோ) தலைவராக பொறுப்பேற்ற நாராயணன் தனது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்தார். நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்த அவருக்கு காவல்துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. சக இஸ்ரோ அதிகாரிகள், அலுவலர்களும் நாராயணனை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் நாராயணன் செய்தியாளர்களிடம்கூறியதாவது:-
1947 இல் சுதந்திரம் அடைந்த பிறகு சாதாரண நாடாக இருந்த இந்தியா தற்போது பெரிய அளவில் முன்னேறி உள்ளது. நம் நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். எனவே, நம் தேசம் வளர்ச்சியடைந்த நாடாக மாற மாணவர்கள் சேவை செய்ய வேண்டும்.
இஸ்ரோவில் மட்டும்தான் வேலை செய்ய வேண்டும் என்பது இல்லை. இஸ்ரோ சார்ந்த பல்வேறு தனியார் நிறுவனங்களிலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம் இருக்கிறது. செயற்கைக்கோள் இஞ்சின் போன்றவற்றை பல்வேறு தனியார் நிறுவனங்கள் தயாரித்து தருகின்றன. இதுபோன்ற வேலைவாய்ப்புகளையும் இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இஸ்ரோவில் நேரடியாக சேர்ந்தால் வரவேற்கத்தக்கது. இல்லாவிட்டாலும் வெளி நிறுவனங்களில் பணியில் சேரலாம்.
இஸ்ரோவின் தலைவர் பதவியை சேர்ந்தவர்கள் கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு, கேரளா என்று பிரித்து பார்க்க வேண்டாம். இது இந்திய விண்வெளி திட்டம். பிரதமர் மோடியின் கீழ் உள்ள பெரிய திட்டம்.
எங்கள் அலுவலகத்தில் திறமைக்கு தான் மதிப்பு. எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பது முக்கியமல்ல. நான் ஒரு சாதாரண கிராமத்தில் இருந்து படித்து வந்தவன். என்னை இஸ்ரோவின் தலைமைப் பொறுப்புக்கு தேர்வு செய்துள்ளார்கள் என்றால் அது என் திறமைக்கான அங்கீகாரம் மட்டுமே.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் மையத்தை அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெர்று வருகின்றன. இன்னும் இரண்டு ஆண்டில் அங்கிருந்து ராக்கெட்டுகள் விண்ணில் பாயும்.
இவ்வ்வாறு இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார். என்றார்.