திமுக சார்பில் அண்ணா நினைவு தின அஞ்சலி
![திமுக சார்பில் அண்ணா நினைவு தின அஞ்சலி](https://tn96news.com/wp-content/uploads/2025/02/7fa597d4-f7ed-48c3-a74f-6db64441e5e1-850x560.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2025/02/69c075aa-2ee9-4d63-8913-8f3d1f34061c-1024x512.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2025/02/4d9998c8-4ff0-4e23-aa55-ace4fd507e88-1024x512.jpeg)
பேரறிஞர் அண்ணா நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது .இதையொட்டி கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள தமிழரசன் படிப்பகத்தில் நகர திமுக சார்பில் நகர்மன்ற தலைவர்,நகரச் செயலாளர் கருணாநிதி தலைமையில் .அண்ணா திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் நகர அவைத்தலைவர் முனியசாமி,பொதுக்குழு உறுப்பினர் ராமர்,மாவட்டத் துணைச் செயலாளர் ஏஞ்சலா,மாவட்ட பிரதிநிதிகள் ரவீந்திரன்,மாரிச்சாமி,மகளிர் தொண்டரணி இந்துமதி,நகரத் துணைச் செயலாளர் அன்பழகன்,தகவல் தொழில்நுட்ப பிரிவு மகேந்திரன்,நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் மத்திய ஒன்றிய திமுக சார்பில் எட்டையபுரம் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் தலைமையில் அண்ணா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் அரசு வழக்கறிஞர் ராமச்சந்திரன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகராஜ்,ஒன்றிய அவைத் தலைவர் பொன்னுச்சாமி,மாவட்ட பிரதிநிதி அசோக்குமார்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பொன்னுத்துரை,பாரதி,மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாதேஸ்வரன்,மூப்பன்பட்டி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மாரீஸ்வரன்,மாணவர் அணி கணேசன்,தொழிற்சங்கம் நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேற்கு ஒன்றிய திமுக சார்பில் இனாம் மணியாச்சி சந்திப்பு பகுதியில் அண்ணாவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.மேற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அண்ணா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதில் பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ்,வழக்கறிஞர் அழகர்சாமி,ஒன்றிய துணைச் செயலாளர் ராஜன்,மாவட்ட பிரதிநிதி முத்துராமன்,மாணவரணி தாமோதரக்கண்ணன்,தகவல் தொழில்நுட்ப பிரிவு பழனிக்குமார்,அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர் சுப்புராயன்,திமுக நிர்வாகிகள் புவனேஷ் குமார், முருகன் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)