கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில், சாலையில் பாய் விரித்து உறங்கும் போராட்டம்

கோவில்பட்டியில் இருந்து மந்தித்தோப்பு செல்லும் சாலை மிகவும் குறுகலாகவும் ஆங்காங்கே பெரிய பள்ளங்களுடன் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.
இந்தச் சாலையை சீரமைக்க வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்ற இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து சாலையை விரிவாக்கம் செய்து சீரமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலையில் பாய் விரித்து படுத்து உறங்கும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மந்தித்தோப்பு சாலை பால்பண்ணை அருகில் போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர நிர்வாக குழு உறுப்பினர் முனியசாமி, நகரப் பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் தலைமை வகித்தனர். நகர நிர்வாக குழு உறுப்பினர் செல்லையா முன்னிலை வகித்தார். மாவட்ட உதவி செயலாளர் பாபு, நகரச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.

போராட்டத்தில் நகர துணை செயலாளர்கள் அலாவுதீன், விஜயலட்சுமி, நகர குழு உறுப்பினர்ககள் கோமதி,சங்கர்,அருண், கண்ணன், அய்யாச்சாமி, மாவட்ட குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் கட்சியினர், அப்பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டு சாலையில் பாய் விரித்து படுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் சாலையின் இருபுறமும் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.







