கோவில்பட்டி கல்லூரியில், `எதிர்காலத்தை வடிவமைப்போம்’ சிறப்பு சொற்பொழிவு
கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி (தன்னாட்சி), முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல் துறை சார்பாக எதிர்காலத்தை வடிவமைப்போம் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
இறைவணக்கத்துடன் துவங்கிய இந்நிகழ்விற்கு கல்லூரி இயக்குநர். பா.மகேஷ்குமார் தலைமையுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக ராஜபாளையம் ராஜீஸ் கல்லூரி, வணிகவியல் துறை இணைப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், ஏ.சுரேந்திரன் கலந்துகொண்டு மாணவர்களின் ஆளுமை வளர்ச்சி, தன்னம்பிக்கை, நேர மேலாண்மை, தகவல் தொடர்புத்திறன், தலைமைத்துவ பண்புகள், தொழில் திட்டமிடல், வேலைவாய்ப்பு திறன், தொழில்முறை ஒழுக்கம் மற்றும் நேர்முக தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்ளுதல் குறித்து மாணவ, மாணவிகளிடம் விரிவாக உரையாற்றினார். முடிவில் முதலாம் ஆண்டு முதுகலை வணிகவியல் துறை மாணவர். நவீன்குமார் நன்றியுரையாற்றினார்.

கருத்தரங்கு
கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி (தன்னாட்சி), முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல் துறை மற்றும் பிள்ளையார் நத்தம், அரசு மேல்நிலைப்பள்ளி சார்பாக விரிவாக்க தொடர்பு நிகழ்வு நடைபெற்றது.
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது? என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. தொடர்ந்து மாணவ, மாணவிகளின் அறிவுத்திறனை பெருக்கும் வகையில் வினாடி வினா போட்டி, ஊமை நாடகம் மற்றும் புதிர் போட்டிகள் நடைபெற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு துறை சார்பாக பதக்கங்கள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் தலைமையாசிரியர். எம்.விஜயக்குமார். வகுப்பாசிரியர், ஜான்சி ராணி,. அய்யாதுரை மற்றும் கீதா ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர்.
முடிவில் வணிகவியல் துறை பேராசிரியார். வி.அமுதா நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை கல்லூரி இயக்குநர் பா.மகேஷ்குமார் மற்றும் துறை பேராசிரியர்கள் வழிகாட்டுதலின் படி முதுகலை மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.







