இசையமைப்பாளர் தேவா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடக்கிறது
தமிழ் திரைத்துறையின் முன்னணி இசையமைப்பாளரும், பாடகருமானவர் தேனிசை தென்றல் தேவா. இவர் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். 76 76 வயதான தேவாவுக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு திரைத்துறையினர், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இசையமைப்பாளர் தேவா உடலுக்கு முதல்-அமைச்சர் விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். நுங்கம்பாக்கத்தில் உள்ள தேவா வீட்டிற்கு நேரில் வந்த முதல்-அமைச்சர் விஜய் தேவாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
தேவா உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் ஆளாக நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் தேவா மகன் ஸ்ரீகாந்த் தேவாவின் கைகளை பற்றிக் கொண்டு மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவரது
குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். மு.க.ஸ்டாலினை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் தேவா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
தேவா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இசை உலகிற்கு ஆற்றிய சேவையை வகையில் அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பல கானா பாடல்களை எழுதி, இசையமைத்து, பாடியுள்ள தேவா, 1990-ம் ஆண்டு வெளியான ‘வைகாசி பொறந்தாச்சு’ படம் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’, அஜித்தின் ‘ஆசை’, ‘காதல்கோட்டை’, விஜய்யின் ‘மின்சார கண்ணா’, ‘குஷி’ போன்ற ஹிட் படங்களுக்கு இசையமைத்த பெருமைக்கு உரியவர் தேவா.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு தேவா இசையமைத்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி
விருது, சிறந்த இசையமைப்பாளருக்கான மாநில அரசு விருது உள்ளிட்ட விருதுகளை தேவா பெற்றுள்ளார்..







