கலாநிதி மாறன் மகள் காவ்யாவை மணக்கிறார் அனிருத்
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகத் திகழும் அனிருத்துக்கும், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட நாட்களாக இவர்கள் இருவரது திருமணம் குறித்த கிசுகிசுக்கள் வலம் வந்த நிலையில், தற்போது திருமண நாள் திருமணம் நடக்கும் இடம் குறித்த விவரங்கள் கசிந்துள்ளன.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் வரும் நவம்பர் 11-ஆம் தேதி கிரீஸ் நாட்டில் நடைபெற இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலில் செஷல்ஸ் நாட்டில் திருமணத்தை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது இயற்கை அழகும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடமுமான கிரீஸ் நாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்தத் திருமண விழாவில் இரு குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் மற்றும் முக்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக விருந்தினர்களை அழைத்துச் செல்லத் தனித்தனியாக 4 விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
வெளிநாட்டில் திருமணம் முடிந்த கையோடு, நவம்பர் 21-ஆம் தேதி சென்னையில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஓட்டலில் பிரமாண்டமான வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் திரைத்துறை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இதற்கான திருமண வரவேற்பு பத்திரிகை வழங்கும் பணியும் தொடங்கிவிட்டது. இதன் ஒரு பகுதியாக, சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி காவேரி மாறன் ஆகியோர் நேரில் சென்று தெலுங்கானா முதலமைச்சர் ஏ. ரேவந்த் ரெட்டியை ஹைதராபாத்தில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கியுள்ளனர்.
இசையமைப்பாளர் அனிருத் மணக்க இருக்கும் காவ்யா மாறன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் நிர்வாகியாக உள்ளார்.
.







