ஈரோடு கலெக்டர் சென்ற கார் மோதி விவசாயி பலி
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள வெள்ளாளபாளையம் பிரிவில் மாவட்ட கலெக்டர் கந்தசாமி காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ஸ்கூட்டர் மீது கார் மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் ஸ்கூட்டரில் சென்ற வெள்ளாங்கோயிலை சேர்ந்த விவசாயி சண்முகம் என்பவர் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.

விவசாயி சண்முகம் தனது ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிப்பதற்காக வட்டாரப் போக்குவரத்து (RTO) அலுவலகத்துக்குச் சென்றுவிட்டு வெளியே வந்தபோது இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது
விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் கந்தசாமி வேறு வாகனத்தில் ஈரோடு சென்றார்.







