கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா; 25 ம் தேதி கொடியேற்றம்
பிரசித்தி பெற்ற கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா 25.10.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் கொடியேற்று விழாவுடன் தொடங்குகிறது. ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து
5.11.2026 வியாழக்கிழமை விழா நிறைவடைகிறது.
24.10.2026) சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் அங்குரார்ப்பணம் நடக்கிறது. ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா நிகழ்ச்சி நிரல் வருமாறு:-
1 வது திருநாள் : 25.10.2026 ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றம் ரேவதி நட்சத்திரம் சித்த யோகமும் கூடிய சுபதினத்தில் அன்று காலை7 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் துலா லக்கனத்தில் கொடியேற்றுதல் மண்டகப்படிதாரர் : திருக்கோயில்.
இரவு 7.30 மணிக்கு புஷ்ப சப்பரத்தில் அம்மன் திருவீதி உலா
மண்டகப்படிதாரர் பிராமணாள் சமூகம், கோவில்பட்டி.

2 வது திருநாள் : 26.10.2026 திங்கள்கிழமை
காலை 8 மணி -பல்லக்கில் அம்மன் திருவீதி உலா
இரவு 7.30 மணி -காமதேனு வாகனத்தில் அம்மன் திருவீதி உலா
மண்டகப்படிதாரர் : அ.பூலோகப்பாண்டியத் தேவர்
.அ.ரத்தினவேல்ச்சாமித் தேவர் குடும்பத்தினர் இனாம்மணியாச்சி.
3 வது திருநாள் : 27.10.2026 செவ்வாய்கிழமை
காலை 8 மணி -பல்லக்கில் அம்மன் திருவீதி உலா
இரவு 7.30 மணி- சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா மண்டகப்படிதாரர் : இல்லத்துப்பிள்ளைமார் சங்கம், கோவில்பட்டி.
4 வது திருநாள் : 28.10.2026 புதன்கிழமை
காலை 8 மணி -பல்லக்கில் அம்மன் திருவீதி உலா
இரவு 7.30 மணி- ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதி உலா
மண்டகப்படிதாரர் : மேடைத்தளவாய் கட்டளை, திருநெல்வேலி.
5 வது திருநாள் : 29.10.2026 வியாழக் கிழமை
காலை 8 மணி -பல்லக்கில் அம்மன் திருவீதி உலா
இரவு 7.30 மணி-காமதேனு வாகனத்தில் அம்மன் திருவீதி உலா
மண்டகப்படிதாரர் : விஸ்வகர்ம நகைத்தொழிலாளர் சங்கம், கோவில்பட்டி.
இரவு 8.மணி: சன்டிவி புகழ்.டாக்டர்.இராம.பூதத்தான் தலைமையில் பட்டிமன்றம் நடைபெறும்.

6 வது திருநாள்: 30.10.2026 வெள்ளிக்கிழமை
காலை 8மணி -பல்லக்கில் அம்மன் திருவீதி உலா
இரவு 7.30 மணி -அன்ன வாகனத்தில் அம்மன் திருவீதி உலா
மண்டகப்படிதாரர் : வெ.சு.அழகிரிசாமி செட்டியார் காசுக்கடை தூத்துக்குடி.
7 வது திருநாள்: 31.10.2026 சனிக்கிழமை
காலை 8. மணி -பல்லக்கில் அம்மன் திருவீதி உலா
இரவு 7.30 மணி -சப்பரத்தில் அம்மன் திருவீதி உலா மண்டகப்படிதாரர் : சைவவேளாளர்கள் சங்கம், கோவில்பட்டி.
8 வது திருநாள்: 1.11.2026 ஞாயிற்றுக்கிழமை
காலை 8. மணி- பல்லக்கில் அம்மன் திருவீதி உலா
இரவு 7.30 மணி- சப்பரத்தில் அம்மன் திருவீதி உலா மண்டகப்படிதாரர் : சைவசெட்டியார்கள் சங்கம், கோவில்பட்டி.
9 வது திருநாள் : 2.11.2026 திங்கள்கிழமை திருத்தேர்
காலை 6. மணிக்கு மேல் 7 மணிக்குள் ரதாரோகணம்
காலை 9.மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல்
மண்டகப்படிதாரர் : வணிக வைசிய சங்கம், கோவில்பட்டி. இரவு 7.30 மணி அம்மன் அன்ன வாகனத்தில் திருவீதி உலா மண்டகப்படிதாரர் : வணிக வைசிய சங்கம், கோவில்பட்டி.
10 வது திருநாள்: 3.11.2026 செவ்வாய்கிழமை
காலை 8 மணி- பல்லக்கில் அம்மன் திருவீதி உலா
-இரவு 7.30 மணி
ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதி உலா
மண்டகப்படிதாரர் : ஆயிர வைசிய காசுக்காரச் செட்டிப் பிள்ளைகள் சங்கம், கோவில்பட்டி.

11 வது திருநாள் : 4.11.2026 புதன்கிழமை
பகல் 1 மணி தபசு சப்பரத்தில் அம்மன் தபசுக்கு எழுந்தருளல்
மாலை 6 மணி- சுவாமி ரிஷப வாகனத்தில் பூவனநாதராக அம்மனுக்கு காட்சி கொடுத்தல். காட்சி மண்டகப்படிதாரர் : எல்.இராமலிங்கம் குடும்பத்தினர், திருநெல்வேலி.
தபசு மண்டகப்படிதாரர் : மூவேந்தர் பண்பாட்டுக் கழகம், கோவில்பட்டி.
12 வது திருநாள்: 5.11.2026 வியாழன்கிழமை திருக்கல்யாணம்
காலை 8.மணி -பல்லக்கில் அம்மன் திருவீதி உலா
இரவு 7.மணிக்கு மேல் 8.00 க்குள் ரிஷப லக்கனத்தில் திருக்கல்யாணம் நடைபெறும். பின்னர் சுவாமி யானை வாகனத்தில் அம்மன் பல்லக்கில் பட்டணப்பிரவேசம்.
மண்டகப்படிதாரர் : எம்.எஸ்.ஆவுடையப்பன்செட்டியார் குடும்பத்தினர், முடுக்குமீண்டான்பட்டி
திருமணச்சீர் உபயம் :
5.11.2026 வியாழன்கிழமை நடைபெறும் செண்பகவல்லி அம்மன் – பூவனநாதசுவாமி திருக்கல்யாணத்திற்கு திருமணச்சீர் செய்ய விரும்புவோர் திருக்கோயிலில் திருமணச்சீர் பணம் செலுத்தி சுவாமி அம்பாள் அருள்பெற வேண்டுகிறோம்.
ரூ.300/- க்கு மேல் சீர் செய்யும் அன்பர்களுக்கு திருக்கல்யாணத் தினத்தன்று அம்மன்
திருக்கல்யாண பிரசாதம் பையுடன் வழங்கப்படும்.
திருக்கல்யாணம் முடிந்தவுடன் செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் முன்பு அமைந்துள்ள காயத்ரி மண்டபத்தில் பிராமண மகாசபை சார்பாக அன்னதானம் நடைபெறும்.







