பருவமழை எச்சரிக்கை: தூத்துக்குடி மாவட்ட நீர்நிலை பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக இன்று (23.10.2026) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன், நீர்நிலைப் பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் , டி. சண்முகபுரம் ஊராட்சி, ஆத்திக்கிணறு குளத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் , எஸ்.கைலாசபுரம் ஒடையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் , கொம்பாடி ஒடையினை பார்வையிட்டார். மேற்கண்ட ஓடைகளில் கன மழையினால் நீர்வரத்து அதிகரித்தால் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் , எப்போதும் வென்றான் அணைக்கட்டுக்கு சென்று பார்வையிட்டார். தற்போது நீர் மட்டத்தின் அளவு என்ன என்பதை கேட்டறிந்தார். அணை நிரம்பினால் எந்த வகையில், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் திறந்து விட வேண்டும் என்பது பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்







