குளத்தங்கரையில் கல்லூரி மாணவிகள் பனை விதைகள் நட்டனர்
மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியின் தொடர்ச்சியாக நீர் நிலைகளை பாதுகாக்க, மண்ணரிப்பை தடுக்க தூத்துக்குடி மாவட்டம் அம்மன் புரம் அருகே உள்ள குளத்தங்கரையில் பனை விதைகள் நடும் பணியை இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு, கிரீன் தமிழ்நாடு மிஷின், பசுமை தமிழகம், மாவட்ட வனத்துறை, வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் கொட்டும் மழையும் மழையிலும் பனைமர விதைகள் நடும் பணி நடைபெற்றது.

மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதி பாலா மணி தலைமை தாங்கினார். மதர் சமூக சேவை நிறுவன ஒருங்கிணைப்பாளரும், லீடு டிரஸ்ட் இயக்குனருமான எஸ் பானுமதி, நல்லூர் ஊராட்சி மன்ற செயலாளர் கா. கீதா, ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
பனை விதை நடும் பணியில் கல்லூரி 1 மற்றும் 2 ம்ஆண்டு மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று பனை விதைகளை விதைத்தனர்.
கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சு . ஏஞ்சல் லதா, இணை திட்ட அலுவலர் கோ. அனிட்டா பிளஸி ராணி, வீர மாணிக்கபுரம் ஊராட்சி மன்ற பணித்தள பொறுப்பாளர் பாக்கியலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.







